பக்கம்:அப்பாத்துரையம் 12.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(208

அப்பாத்துரையம் - 12

மாகாணங்களிலும் பேரவைக் கட்சி ஆட்சிகள் ஏற்பட்டன. தொடக்கத்தில் 6 மாகாணங்களிலும் நாளடைவில் பின்னும் மாகாணங்களிலும் பேரவை ஆட்சியைக்

இரண்டு

கைக்கொண்டது.

ராஜேந்திரப் பிரசாது- ஜின்னா பேச்சுக்கள்

முழுநிறை விடுதலையே பேரவையின் குறிக்கோள் என்பது 1929-ஆம் ஆண்டு பேரவையிலேயே அறிவிக்கப்பட்டிருந்தது.முன் பொறுப்பாட்சிக் குறிக்கோள் வகையில் முஸ்லிம் சங்கம் பேரவையைப் பின்பற்றியது போலவே, 1938-ஆம் ஆண்டிலும் இலட்சுமணபுரியிற் கூடிய முஸ்லிம் சங்கக் கூட்டம் முழுநிறை விடுதலையைத் தன் அரசியல் குறிக்கோளாக ஏற்றது. இதையடுத்து இந்துப் பேரவையும் இக்குறிக்கோளை ஏற்றது.

பேரவைக்கும் முஸ்லிம் சங்கத்துக்கும் இதுவரை அரசியல் காரணமாக வேற்றுமை மிகுதி இல்லை என்பதை இது நன்கு எடுத்துக் காட்டுகிறது. அது மட்டுமன்றி, வகுப்புத் தீர்மான வகையிலும் முஸ்லீம் சங்கம் இன்னும் பேரவையைத் தெளிவாக எதிர்க்கவில்லை. ஆயினும், 1922 முதலே வகுப்புவாதம் நாட்டில் பெருகி வந்ததற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. அவ்வாண்டு முதல், வகுப்புக் கலவரங்கள் தோன்றிப் படிப்படியாய் வளர்ந்தன. முதலில் சமயவெறியர்களிடம் தோன்றிய வேறுபாடு சமூகத்திலும், சமூகங்கடந்து அரசியலிலும் புகுந்து வந்தது. பேரவை இதில் நடுவு நிலையே வகித்தாலும், இவ்வகுப்பு வாதம் மக்களிடையே வளர்ந்து இந்து முஸ்லிம் ஆகிய இருவகுப்புச் சபைகளையும் மெள்ள மெள்ள வளர்த்து வந்தது.

இங்ஙனம் வகுப்புவாதத்தை வளர்க்கவிடப் பேரவைத் தலைவர்கள் விரும்பவில்லை.1935ல் பேரவைத் தலைவராயிருந்த ராஜேந்திரப் பிரசாது அவ்வாண்டில் இதுவகையில் முஸ்லிம் சங்க இயக்கத் தலைவரான ஜின்னாவுடன் கலந்து பேசினார். ஆனால், எத்தகைய சமரச முடிவும் ஏற்பட முடியாது போயிற்று. 1937ல் தலைவர் ஜவஹர்லாலின் தலைமையுரையில் இதன் எதிரொலியைக் காண்கிறோம்: "நாம் வகுப்புவாதத் தலைவர்களோடு சமரசம் பேசுவதிலும் ஒப்பந்தம் செய்வதிலும் காலத்தைக் கழித்தோமே அல்லாது இத்தலைவர்களுக்குப்