இந்திய மக்கள் விடுதலை இயக்க வரலாறு
209
பின்னாலிருக்கும் மக்களைக் கவனித்தோமில்லை. வகுப்புத் தலைவர்களுடன் பேசி ஒப்பந்தம் காண எண்ணுவது பயனற்ற கொள்கை” என்று அவர் முடிவு கட்டினார். ஆயினும், இதுவே முடிந்த முடிபாய்விடவில்லை. மீண்டும் ஜின்னாவுடன் அடிக்கடி சமரஸப் பேச்சுக்கள் ஏற்பட்டதுண்டு.ஆனால்,1935-ஆம் ஆண்டு முடிவுக்கப்பால், எத்தகைய புது முடிபும் ஏற்பட முடியவில்லை.
போஸ் தலைமை
காந்தியடிகளுக்கு அடுத்தபடியாகப் பேரவை இயக்கத்தில் பொது மக்களிடையே செல்வாக்கும் புகழும் பெற்ற தலைவர் பண்டித ஜவஹர்லால் நேருவேயாவர். காந்தியூழியிலேயே அவர் காந்தியடிகளால் தம் மரபுரிமையாளர் என்று குறிக்கப்பட்டிருந் தார். ஆயினும், 1938க்கும் 1942க்கும் இடைப்பட்ட காலத்தில் பண்டித ஜவஹர்லால் புகழைத் தாண்டி அரும்பெருங்காரியங் களாற்றி, இந்தியாவுக்குப் பெரும்புகழ் தந்தவர், தலைவர் பெருந்தகை (நேதாஜி) என்ற சிறப்புப் பெயர் பெற்ற சுபாஷ் சந்திர போஸ். இந்த நான்காண்டுகளையும் நாம் பேரவை இயக்க வரலாற்றில் தனிப்படத் ‘தலைவர் பெருந்தகை போஸ் ஊழி' என்னலாம். அவ்வரலாறு பேரவையின் வீர காவியத்துக்குள் ஒரு தனி வீர காவியமாய் இலங்கவல்லது.
இந்த நான்காண்டுகளுக்கிடையில் அவர் வாழ்ந்த வாழ்க்கை தென்கிழக்கு ஆசியாவின் அலெக்ஸாண்டர் அல்லது ஸீஸர் அல்லது நெப்போலியன் வாழ்க்கை என்னலாம். பாரதக் கதையிலிருந்து உவமை எடுத்துக் கூறுவதானால், காந்தியடிகள் இந்திய வரலாற்றில் ஒரு கண்ணனாகவும், ஜவஹர் ஓர் அருச்சுனனாகவும் காட்சியளிக்கிறார்கள் என்று கூறத்தகும். அக்காவியத்தில் பதினான்காம் நாளைய பாரதப் போரை ஒரு முதல்தர நாடகமாக்கி, ‘மறைந்த போர்வாள் அபிமன்னன்' என்று தலைவர் பெருந்தகையான போஸைக் குறிப்பிடலாம்.
ய
ரத்தியாகிகளிடையே
இந்தியாவின் முதன்மை வாய்ந்தவருள்ளும் முன் வரிசையில் இடம்பெறத்தக்கவர் போஸ். அவர் இளமாணவருலகின் உச்சக் கனவுகளுக்கு இலக்கான ஐ.ஸி.எஸ். தேர்வில் தேறிப் பட்டம்பெறும் தறுவாயில், தேசிய ஆர்வத்தால் அதைத் துறந்து இந்தியா வந்து, ஒத்துழையாமை