210
அப்பாத்துரையம் - 12
இயக்கத்தில் குதித்தவர். அவர் கல்லூரி ஆசிரியர், பத்திரிகை ஆசிரியர், சட்டசபை அங்கத்தினர், கல்கத்தா நகர்ப் பேரவை ஆட்சிக் குழுவினர், நகரவைத் தலைவர், தொண்டர் படைத் தலைவர் எனப் பல துறைகளிலும் தொண்டாற்றியவர். பல தடவை ஓயா உடல் நலிவிடையேயும் அவர் பொதுக்கூட்டங் களிலும் போராட்டங்களிலும் கலந்து இன்னல்களுக்கும் நீடித்த சிறைத் தண்டனைகளுக்கும் ஆளாகியவர். வங்கப் பெருந்தலைவர் ஸி.ஆர். தாஸுக்குப் பின் அவருடைய உரிமை மரபினராய் வங்கத்தின் உயிர் நாடியாய் அவர் விளங்கினார்.
1929-30ல் பண்டித ஜவஹர்லாலுடன் நின்று குடியேற்ற நிலைவாதிகளனைவரையும் எதிர்த்து முழுநிறை விடுதலை உரிமைக்குப் போராடி போஸ் பேரளவு வெற்றி பெற்றார். 1932லிருந்து அவர் இடையறாச் சிறை வாழ்வு வாழ்ந்து, உடல் நலிவு காரணமாக வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டிருந்தார். வெளிநாட்டில் வீரப் பெரியார் வி.ஜே. பட்டேலுடன் இந்திய விடுதலைக்கான வெளி நாட்டியக்கங்களை ஒருங்கமைத்து, அவர் இறந்தபின் அவர் பின்னுரிமையாளரும் ஆயினார்.1938ல் அவர் வெளி-நாட்டிலிருக்கும் போதே பேரவை ஒரு மனமாக அவரைத் தலைவராகத் தேர்ந்தெடுத்தது.
ஹரிபுராப் பேரவை
மக்கள்
பேரவை சிற்றூர்ப் பேரவையாக்கப்பட்டபின் போஸ் தலைமையில் நடந்த 1938-ஆம் ஆண்டின் ஹரிபுராப் பேரவை, 1939-ஆம் ஆண்டில் திரிபுரிப் பேரவை ஆகியவற்றைப் போல உணர்ச்சியலைகளைப் பொங்கியெழச் செய்த மாநாடுகள் வேறு இல்லை என்னலாம். மிக்க இளமையிலேயே முதல் தரத் தலைவர்களும் போற்றும் போஸின் தீவிரத் தியாக வாழ்வும், தூய ஆன்மிக வாழ்வும், திறமையும் அனைவர் கருத்தையு கவர்ந்தன. அவர் தலைமையுரை, பேரவையின் எழுச்சிக்காலத் தலைமையுரைகளிடையே குறிப்பிடத்தக்கதாய் அமைந்தது. அது எடுத்த எடுப்பிலேயே ஏகாதிபத்திய எதிர்ப்புக் குரலாய், பேரவை இது வரை கேட்டுப் பழகிய முழக்கங்களை எல்லாம் தாண்டிய சிங்க முழக்கமாய் இருந்தது.