பக்கம்:அப்பாத்துரையம் 12.pdf/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இந்திய மக்கள் விடுதலை இயக்க வரலாறு

211

“பிரித்தாளும் கொள்கையைப் பின்பற்றியே உலகப் பேரரசுகள் யாவும் இது வரை வாழ்ந்து வந்துள்ளன. இது யாவரும் அறிந்த உண்மை. ஆனால், பிரிட்டனைப் போல அதை அவ்வளவு சூழ்ச்சியுடனும், அவ்வளவு உணர்ச்சியற்ற முறையிலும், கண்டிப்பான முறையிலும் கையாண்ட மற்றொரு பேரரசை உலகவரலாற்றில் காண முடியாது” என்பது அவர் தலைமையுரையின் முதல் வாசகம். அதன் இறுதிவாசகம், "இந்திய விடுதலைக்குக் காந்தியடிகள் இன்றியமையாதவர். மனித சமூகத்திற்கே காந்தியடிகள் இன்றியமையாதவர். இந்தியா விடுதலை பெற்றது என்றால், மனித சமூகமே காப்பாற்றப் பட்டது.' என்பதுதான் பொருள். ஆகவே, காந்தியடிகள் நெடுநாள் வாழ வேண்டும் என்று நாம் வாழ்த்தக் கடமைப் பட்டுள்ளோம்!" என்று இந்தியாவின் தந்தையாரைச் சுட்டிக் காட்டிற்று.

ஹரிபுராப் பேரவை 1935-ஆம் ஆண்டு இந்திய அரசியல் சட்டத்தின் கூட்டுறவரசுப் பகுதியை நடைமுறைக்கு வாராதபடி தடுத்தழிக்க விரும்பிற்று, மாகாணங்களிலும் தடுத்தழிக்க விரும்பிற்று, மாகாணங்களிலும் நடுவரசிலும் இடம் பெற்ற பேரவை அமைச்சர்களையும் சட்டமன்ற உறுப்பினர்களையும் அந்நடவடிக்கையில் முனையும்படி அது கேட்டுக் கொண்டது. மேலும் அப்பேரவையிலேயே காந்தியடிகளின் அடிப்படைக் கல்வித் திட்டத்தை ஒழுங்கமைத்து உருவாக்க இந்திய மாநிலக் கல்விக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. மன்னர் நாட்டு அரசியலில் பேரவை கலக்கக் கூடாதானாலும், அப்பகுதியிலுள்ள மக்களின் போராட்டங்களுக்குப் பேரவை எப்போதும் தன் ஆதரவை அளிக்கும் என்று உறுதி கூறப்பட்டது. குடியானவர் இயக்கம், கடல் கடந்த இந்தியர் நிலை, போர் நிலவரம் ஆகியவற்றைப் பற்றி அப்பேரவை அலசி ஆராய்ந்தது. ஏகாதிபத்தியம் ஈடுபடும் போர்களில் இந்தியா கலக்காமல் விடுதலை பெறும்வரை எதிர்க்கும் என்ற ஒரு துணிகரத் தீர்மானத்தைத் தலைவர் போஸ் கொண்டு வர விரும்பினார். ஆனால், அது நிறைவேறவில்லை.