பக்கம்:அப்பாத்துரையம் 12.pdf/233

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(212)

திரிபுராத் தலைவரின் அம்புப் படுக்கை

அப்பாத்துரையம் - 12

திரிபுரிப் பேரவையின் தலைமைத் தேர்வு பேரவையின் வரலாற்றில் முன் என்றும் ஏற்பட்டிராத ஒரு நிலைமையை உண்டு பண்ணிற்று. 1929ல் முழு நிறை விடுதலைத் தீர்மான வகையில் ஏற்பட்ட பிளவு முற்கால மிதவாதிகள் தீவிரவாதிகள் பிளவு போன்றதே. ஆனால், 1929ல் அது மிதவாதிகள் தீவிரவாதிகள் என்ற பெயர்களை விடுத்து, அரசியல் மொழியில் வலசாரி இடசாரி என்று வழங்கப்பட்டது. வலசாரியினர் காந்தியடிகளின் புகழ் பெற்ற தலைமையாற்றலைப் பயன்படுத்தினர். இடசாரி களின் சார்பில் போஸ் அதனை எதிர்த்தார். பேரவையின் வரலாற்றில் முதல் தடவையாகத் தலைவர் தேர்தல் பிரசாரம். சட்டசபைத் தேர்தல் பிரசாரம் போன்று நடைபெற்றது. பேரவையின் மொழிச் சீட்டு அடிப்படையுறுப்பினர் எண்ணிக்கையைப் பொறுத்ததாயிருந்தது. வங்கமும் தமிழகமுமே மிகப் பெரும்பான்மையான பேரவையுறுப்பினர்களையுடைய- வையாயிருந்தன. வங்கத்தின் முடிசூடா மன்னராயும் இந்திய இளைஞர்களின் வீர தீரத் தலைவராயும் விளங்கிய போஸ், வங்கத்துடன் தமிழகத்தின் மொழிச் சீட்டுக்களைப் பெரும்பான்மையாகப் பெற்றதால் தேர்தலில் வெற்றி பெற்றுப்

பேரவைத் தலைவரானார்.

தலைவர் தேர்தல் ஒரு போராட்டமாயிருந்ததென்றால், போஸின் தலைமைப் பதவி போர்க்களத்தின் அம்புப் படுக்கையாகவே அமைந்தது என்னலாம். காந்தியடிகளுடன் அடிப்படைப் போராட்டத்தில் போஸும் இடசாரியும் மாறுபடவில்லையாயினும், முறைகளில் இடசாரியினர் பொதுவாகவும் போஸ் சிறப்பாகவும் மாறுபட்டிருந்தனர். காந்தியடிகளால் இம்மாறுபாட்டை வலியுறுத்தாமல் இருக்க முடியவில்லை. காந்தியடிகளின் தனிப்பட்ட செல்வாக்கு இங்ஙனம் வலசாரியுடன் சேர்ந்து தலைவர் நிலையை க்கட்டுக்கு உள்ளாக்கிற்று. தலைவர் போஸ் இச்சமயம் நோய்வாய்ப்பட்டு நலிவுற்றிருந்தார். அவரை எடுப்புக் கட்டிலில் வைத்தே மாநாட்டுப் பந்தலுக்கு எடுத்து வரவேண்டியிருந்தது. அத்தறுவாயிலும் அவர் வீர உரையாற்றினார். எதிர்ப்புகளைச் சமாளித்துப் பிறர் உதவியின்றிப் பேரவைத் தொண்டுகளைத் தாமே செய்தார்.