(214
பேரவை ஆட்சி: உலகப்போர்
அப்பாத்துரையம் - 12
இவ்வாண்டு செப்டெம்பர் 3-ஆந் தேதி இரண்டாம் உலகப் போர் மூண்டது. 'போர் நோக்கங்கள் என்ன?' என்று பேரவைத் தலைவர்கள் ஆட்சியாளரைக் கேட்டார்கள். அடிமைத் தளையிற் சிக்கிய இந்தியாவைப் போன்ற எல்லா நாடுகளின் மக்கள் விடுதலைக்காகவே போர் நடப்பதனால்தான் இந்தியா போரில் கலப்பதற்குப் பேரவை ஆதரவு தர முடியும். ஆட்சியாளர்
ந்நோக்கத்தைத் தெளிவுபடுத்தாமலே, எவர் விருப்பத்தையும் சட்டை செய்யாமல், செயலாற்றினர். அவர்கள் எதேச்சாதிகாரத் தால் இந்தியாவைப் போரில் ஈடுபடுத்தினார்கள். எனவே, அக்டோபர் 22-ஆம் தேதி பேரவைச் செயற்குழு கூடிப் பேரவைக் கட்சிச் சார்பில் ஆட்சி செய்த அமைச்சவைகள் அனைத்தையும் பதவி துறக்கும்படி கோரிற்று. அதன்படி நவம்பர் 8-ஆந் தேதிக்குள் எல்லாப் பேரவைக் கட்சி அமைச்சவைகளும் பதவியிலிருந்து விலகின.
1935 இந்திய அரசியல் சட்டத்தின் மாகாணத் தன்னாட்சிப் பகுதியின் கீழ்ப் பேரவை இரண்டாண்டுகள் ஆட்சி நடத்தியிருந்தது. அதற்குள் அது காட்டிய அரசியல் நேர்மையும் திறமையும் பிரிட்டிஷ் ஆட்சியாளராலேயே போற்றப்படத் தக்கனவாயிருந்தன. சென்னையில் சக்கரவர்த்தி ராஜகோபாலா சாரியார் தலைமையில் நடைபெற்ற ஆட்சியே திறமைக்கும், நேர்மைக்கும், கட்டுப்பாட்டுக்கும், நாட்டு நலங்களுக்கான திட்டங்களும் முன்னணிப்புகழ் நிறுவிற்று. பதவி ஏற்ற முதல் ஆண்டிலேயே சேலம் மாவட்டத்தில் குடிவிலக்குத் தொடங்கி வைக்கப்பட்டது. அடுத்த ஆண்டு அது பின்னும் இரண்டு மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது.
சென்னைக்
கு
அடுத்தபடி பம்பாய், பேரவைக் கொள்கைகளை நிறைவேற்றுவதில் முனைந்து வழி காட்டிற்று. பதவியேற்ற முதலாண்டிலேயே அங்கே கோயில் உரிமைச் சட்டம் நிறைவேறிற்று. திருவாங்கூரில் இதற்கு முன்னமே மன்னர் விளம்பர மூலம் கோயில்கள் திறந்து விடப்பட்டிருந்தாலும், பிரிட்டிஷ் இந்தியாவில் பம்பாயே இத்துறையில் மற்ற மாகாணங்களைத் தூண்டிற்று.