பக்கம்:அப்பாத்துரையம் 12.pdf/236

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இந்திய மக்கள் விடுதலை இயக்க வரலாறு

வைதிகர்பிடி

(215

பலமாயிருந்ததனால்,

சென்னையில் வ்வகையில் பேரவைத் தலைவர்கள் படிப்படியான மிதவாத நடவடிக்கைகளையே மேற்கொண்டார்கள். சட்டத்தின் மூலம் கோயிலுரிமை நிறுவுவது வைதிகர்களாகிய எதிரிகளைப் புண்படுத்துவதும் அன்பறத்துக்கு (அஹிம்ஸைக்கு) மாறானதும் ஆகும் என்பது காந்தியடிகளின் கொள்கை. சென்னைத் தலைவர் இதனையே பின்பற்றினர். ஆயினும், குருவாயூரில் பொது மக்கள் வாக்காலும் மதுரையில் கோயில் பொறுப்பாளர் வாக்காலும் கோயில் நுழைவுரிமைக்கு ஆதரவு தேடப்பட்டு, அக்கோயில்கள் முதலில் தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் திறக்கப்பட்டன.

து

பம்பாய் அரசியல் சென்னையைப் பின்பற்றி 1939 ஆகஷ்டு 12 முதல் குடிவிலக்கைப் பம்பாய் நகரத்தில் நடைமுறைக்குக் கொண்டு வந்தது. சென்னை முன்னணியில் நின்ற இன்னொரு திட்டம் இந்தி மொழித் திட்டம் ஆகும். இது 1938ல் நூறு பள்ளிகளிலும்,1939ல் இன்னும் 100 பள்ளிகளிலும் முதல் மூன்று படிவங்களில் கட்டாயப்பாடமாக்கப்பட்டது. இதை எதிர்த்துப் பேரவைக்கு வெளியேயிருந்த பல மொழியியக்கத் தலைவர்கள் இந்தி எதிர்ப்பியக்கம் நடத்தினார்கள். அதில் நேர்மைக் கட்சி, தன்மான இயக்கத்தவர், தமிழ்ப் புலவர் ஆகியவருடன் ஒரு சில பேரவை இயக்க அன்பர்களும் பங்கு கொண்டிருந்தனர்.1,000க்கு மேற்பட்ட ஆடவரும், பெண்டிரும் சிறைத் தண்டனைக்கு ஆளாயினர். தாலமுத்து, நடராசன் என்ற இரு இளைஞர் சிறையிலிருந்து அல்லற்பட்டு மாண்டனர். வங்கத்திலும் நடு மாகாணத்திலும், பொதுவாக முஸ்லிம்களிடமும் இந்திக்கு ஓரளவு எதிர்ப்புணர்ச்சி இருந்த போதிலும், இந்திக்கு எதிராகப் பேரளவான இயக்கம் நடைபெற்றது தென்னிந்தியாவில், அதிலும் சிறப்பாகத் தமிழகத்தில் மட்டுமேயாகும்.

ரு

நடுமாகாணத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் ஒருவருக்கு அமைச்சவையில் இடம் அளிக்க வேண்டும் என்ற கிளர்ச்சி ஏற்பட்டது. இது காரணமாக முதல்வர் டாக்டர் கரே பதவி துறந்தார். மற்ற அமைச்சர்களும் அதன்பின் நீக்கப்பட இது தூண்டுதலாயிற்று. பேரவை, டாக்டர் கரேயின் இச்செயலைக் கண்டித்தது. எனினும், நெருக்கடி மீண்டும்தளர்ந்தது. பண்டித சுக்கிலா திரும்பவும் பேரவைக் கட்சிச் சார்பில் முதல்வரானார்.