பக்கம்:அப்பாத்துரையம் 12.pdf/237

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




216

II-

அப்பாத்துரையம் - 12

1939 அக்டோபரில் பண்டித ஜவஹர்லால் நேருவின் தலைமையில் மாநிலப் பேரவைக் கட்சியால் ஒரு தேசியத் தொழில் திட்டக் குழு' நிறுவப்பட்டது. காந்தியடிகள் இயந்திரத் தொழிலையே எதிர்த்தாலும், பேரவையில் பெரும்பாலார் தேசியத் தொழில் வளர்ச்சிக்கு அது இன்றியமையாதது எனக் கருதினர். காந்தியடிகள் மரபுரிமையாளரானாலும், /0)6T (6) தலைவரான ஜவஹர்லால் இதனை ஆதரித்து இக்குழுவில் தலைமை வகித்தார்.

பாகிஸ்தான் கோரிக்கை

பேரவை ஆட்சிக்காலத்தில் பேரவைக்கும் முஸ்லிம் சங்கத்துக்கும் டையேயிருந்த கருத்து வேறுபாடு முதல் முதலாகப் பெரும்பிளவாக வளரத் தலைப்பட்டது. பேரவை பெரும்பான்மையாய் இருந்த அமைச்சவைகளில் ஒரு முஸ்லிமுக்குக் கூட - தேசிய முஸ்லிமுக்குக் கூட- இடமில்லை என்பது பொதுவாக முஸ்லிம் மக்கள் கவனத்தைக் கவர்ந்திருந்தது. முஸ்லிம் சங்கமோ, முஸ்லிம் நலங்களைப் பாதுகாக்கச் சங்க முஸ்லிம்களுடன் கூட்டு அமைச்சவை அமைக்க வேண்டுமென்று கோரியிருந்தது. இது அமையாததால், அது பேரவை அமைச்சர் குழு அமைத்த நாளை முஸ்லிம்களின் துயர் நாளாகக் குறிப்பிட்டு எதிர்ப்பிரசாரம் செய்தது. போர் காரணமாகப் பேரவைக்கட்சித் தலைவர்களே பதவி துறந்தபோது, முஸ்லிம் சங்கத் தலைவர் அதனை முஸ்லிம்கள் விடுதலை நாளாகக் கொண்டாடும்படி கூறினார்.

1910லிருந்து வகுப்புத் தீர்மானத்தை எதிர்த்துத் தேசிய முஸ்லிம்களில் தலைசிறந்தவராய் விளங்கிய ஜின்னா, இங்ஙனம் படிப்படியாக முஸ்லிம் வகுப்புவாதிகள் பக்கம் சாய நேர்ந்தது.

1940 மார்ச்சு 22 முதல் 24 வரை நடைபெற்ற முஸ்லிம் சங்கப் பேரவையில், 'முஸ்லிம்கள் ஒரு தனிச் சமூகத்தவர்களல்ல; ஒரு தனித் தேசிய இனத்தவர், என்ற போக்குக்குப் பேராதரவு ஏற்பட்டது. முஸ்லிம்களுக்கு முஸ்லிம் பெரும்பான்மைப் பகுதிகளை ஒதுக்கி ஒரு தனி நாடாக்க வேண்டுமென்ற தீவிரக் கருத்து இதுவைர முஸ்லிம்களில் ஒரு சாராரிடையே இருந்து