இந்திய மக்கள் விடுதலை இயக்க வரலாறு
(217
வந்தது. இப்புதிய கற்பனை நாட்டுக்கு அவர்கள் பாகிஸ்தான் என்று பெயர் தந்திருந்தனர். இந்த முஸ்லிம் சங்கக் கூட்டத்தில் அது வளர்ந்து, 'பாகிஸ்தான்' தீர்மானமாக உருவாயிற்று. ங்ஙனம் வகுப்புவாதப் பிரச்சினை தீர்க்கப்படாமல் சார்பு எதிர்ப்புப் போர்களாக நடைபெற்றது காரணமாக, வகுப்புவாதக் கிளர்ச்சி நாட்டுப் பிரிவினைக் கிளர்ச்சியாய் மாறிற்று.
முஸ்லிம் சங்கத்தின் இத்தீர்மானம், பேரவையில் ஓரளவும், பேரவைக்கு வெளியே மிகுதியாகவும் இந்துக்களிடையில் நாட்டுப் பிரிவினை எதிர்ப்பைக் கிளறிற்று. இந்நிலை முஸ்லிம் சங்கம், பேரவை என்ற அரசியல் வேறுபாட்டைப் பேரவை அறியாமலே முஸ்லிம், இந்து என்ற வேறுபாடாக மாற்றி வந்தது. பேரவை அதை இன்னும் அரசியல்வாதிகளின் வேற்றுமையாக மட்டுமே நினைத்தது. அத்துடன் முஸ்லிம் வகுப்புவாத அவையாய் மாறிவிட்ட முஸ்லிம் சங்கத்துடன் தேசிய அவையாகிய பேரவை சமரசப் பேச்சுப் பேச முயன்றது. முஸ்லிம் வகுப்புவாதிகளையும் இந்து வகுப்புவாதிக திகளையும் சந்திக்க விட்டுப் பேரவை நடுவு நிலைமை வகித்து நின்று, சமரஸ முயற்சியில் முனைந்திருந்தால், நிலைமை மாறியிருக்கும் என்று கூறலாம். இம்முயற்சி மேற்கொள்ளப்படவில்லை. இந்நிலையில் பேரவையின் பின்னணியில் இந்து வகுப்புவாதம் வளர்ந்து இந்துப் பேரவை வலுப்படவும், 'மாநிலப் பேரவை இந்துக்களின் பிரதிநிதித்துவசபை, என்ற முஸ்லிம் சங்கத்தாரின் குற்றச்சாட்டுக்கு வெளித்தோற்றத்தில் ஆதரவு பெருகவும் வழி ஏற்பட்டது.
காந்தியடிகளின் போர்க் கொள்கையும் -
பேரவையின் போர்க் கொள்கையும்:
1940 ஜூலை 2-ஆம் தேதி காந்தியடிகள் மாநில ஆட்சி முதல்வரைச் சந்தித்துப் போர் பற்றிப் பேசினார். அதில் காந்தியடிகள் மனப்பான்மைக்கும் பேரவையில் ஜவஹர்லால் நேரு, ராஜகோபாலாசாரியார் ஆகியவர்கள் மனப்பான்மைக்கும் இடையேயுள்ள வேறுபாடு தெளிவாக்கப்பட்டது.காந்தியடிகள் இதனை விளக்கித் தம் அன்பறக் கோட்பாட்டை அரசாங்கம் ஏற்க முடியவில்லையானாலும், பேரவையின் நோக்கத்துக் காயினும் விட்டுக் கொடுக்கும்படி கேட்டார். இது வகையில் அரசாங்கத்தின் நிலையைத் தெளிவுபடுத்தப் பேரவைச்