(218
அப்பாத்துரையம் - 12
செயற்குழு காந்தியடிகள் தலைமை நிலையையே பாதிக்கக் கூடிய ஒரு செயலைக் கூடச் செய்ய முனைந்தது.“அயலார் படையெடுப்பு ஏற்பட்டால், காந்தியடிகளின் அன்பு நெறியைக்கூட விட்டு விடுவோம்,” என்றும்,“போர் முயற்சியின் நோக்கத்தை அரசாங்கம் தெளிவுபடுத்தினால், அதனுடன் போர் ஒத்துழைப்புச் செய்யக் கூடத் தயங்கமாட்டோம்", என்றும் அவர்கள் தீர்மானித்தார்கள். இதனால், எதிர்பார்க்கப்பட்ட அரசாங்க மனமாற்றம்
ஏற்படவில்லை. காந்தியடிகளின் அரசியல் தலைமைதான் பாதிக்கப்பட்டது.
தம் குறிக்கோளும் பேரவைக் குறிக்கோளும் மாறுபட்டவை என்று தெளிவாக்கப்பட்ட பின்பு, பேரவைக்குத் தாம் செயல் முறைப்படி பொறுப்பாளரயிருக்கக் காந்தியடிகள் விரும்ப வில்லை. பேரவையும் அவர் நிலையை நன்குணர்ந்தது. ஆகவே, காந்தியடிகளின் வேண்டுகோளின் பேரில் பேரவை இயக்கத்தைத் தலைமை தாங்கி நடத்தும் முழுப் பொறுப்பிலிருந்து அவர் விடுவிக்கப் பெற்றார். இதன் பின்னும் பேரவையும் அவரும் ஒன்றுபட்டு ஒத்துழைக்காமலில்லை. இருசார்பிலும் ஒத்துழைப்பு என்றும் இருந்தது. ஆனால், தனித்தனி பொறுப்புகள் மதிக்கப் பட்டன. காந்தியடிகளின் அரசியல் தலைமை அறத்தலைமை யாயிற்று.
பேரவையின் போர் பற்றிய புதிய தீர்மானங்களை அவ்வப்போதுராஜகோபாலாசாரியாரே விளக்கி அரசியலாருடன் வாதாடினார். பேரவைப் பெருங்குழுவில் அதற்கான தீர்மானங் களைப்பேரெதிர்ப்புக்கிடையில் நிறைவேற்ற அவரே காரணமா யிருந்தார். காந்தியடிகள் கொள்கையின் தனிப்பட்ட ஆன்மிக உயர்வை எதிர்க்கவும் விரும்பாமல், அரசியல் நோக்கப் படி ராஜகோபாலாசாரியாரின் நேர்மையான கோட்பாட்டையும் எதிர்க்க மனமின்றிக் காந்தியடிகளின் சிறந்த சீடரான பண்டித ஜவஹர்லால் நேரு, ராஜேந்திரப் பிரசாது போன்றவர்கள் 'இரண்டு கன்றினுக்கு இரங்கும் ஓர் ஆவென' நடுவு நிலைமையில் நின்றார்கள்.
இத்தனை அக்கப்போர்களுக்கிடையில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டும், நிலைய சாத்தியமான எல்லாத் தியாகங் களையும் பேரவை செய்தும், பிரிட்டிஷ் ஏகாதிபத்திய ஆதிக்கக்