முகவுரை
நாம் வாழும் இந்தியா பழங்காலந் தொட்டுப் பண்பாட்டில் சிறந்தது. நலஞ்சார்ந்த சீரிய பண்புகள், அதன் உயிர்ப் பண்பாக - மாயாத கன்னிப் பண்பாக- இளமை மாறாத இன்பப் பண்பாக விளங்கி வருகின்றன. இந்த நலங்கள் வெளிநாட்டாட்சியால் நலிந்து வலி குன்றிக் காணப்பட்டன. நல்லவை நசுக்க முடியாதவை; ஒடுக்கமுடியாதவை. அயர்ந்திருக்கலாம் சிறிது காலம்; ஆனால், ஆக்கமுற வீறு கொண்டெழ வேண்டியவையே அவை. அவ்வாறெழும்போது அடக்குமுறையும் தடியடியும் புகையும் சிறைச்சாலையும் பெருந்துணை புரியமாட்டா; தருந்துணையும் தற்காலிகமே. தற்காலிகத் தன்மை தானாக மடிவது; எனவே விடுதலை வீறுபெறும்; விளக்கம் உறும்.
கண்ணீர்ப்
திரு. கா. அப்பாத்துரையவர்கள் எழுதியுள்ள "இந்திய மக்கள் விடுதலை இயக்க வரலாறு” கூறிவந்த இவைகள் பேருண்மைகளாக அமைந்தவை எனக்காட்டுகின்றது. இந்நூலாசிரியர் பதினொரு பிரிவுகளில் இந்தியாவின் விடுதலை இயக்கத்தைத் தெளிவு படுத்தியிருக்கின்றார்.
விடுதலைப் பேரியக்கத்தில் தமிழகம் கொண்ட பங்கு இவ்வளவு என்பதை விளக்க முயன்றிருக்கிறார். தமிழகம் அப்போதைக்கப் போது எழுப்பிய விடுதலைத் துனிக்குரல் மாநில இயக்கத்திற்குத் தூண்டுகோலாய் அமைந்தது; ஊக்கம் தந்தது; 1798ல் நடைபெற்ற பாஞ்சாலங்குறிச்சிப் போராட்டமே 1942ல் நடைபெற்ற ஆண்டுப் புரட்சிக்கு வித்து. 1857ல் நடைபெற்ற வட இந்திய முதல் விடுதலைப் போராட்டம் முதல் குரல் எனின் அத்தகைய குரல் 1806லேயே தமிழகத்து வேலூர் கிளர்ச்சியில் கேட்கிறது. காங்கிரஸ் பேரவையின் பிறப்புக்கு ஏற்ற சூழ்நிலை