பக்கம்:அப்பாத்துரையம் 12.pdf/240

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இந்திய மக்கள் விடுதலை இயக்க வரலாறு

(219

குழுச் சிறிதும் அசைந்து கொடுக்கவுமில்லை; மனமாறவும் ல்லை. பேரவையின் கடமை நிலையும், காந்தியடிகளின் நிலையும் ஒருங்கே பெருத்த இடர்ப்பாட்டுக்கு உள்ளாயின. மக்களுக்கும் இயக்கக் குறிக்கோளுக்கும் அவர்கள் ஆற்ற வேண்டிய கடமைகளை அவர்கள் பின்னும் நீடித்துப் புறக்கணித்திருக்க முடியவில்லை. இந்நிலையில் நாட்டுக்கு வழி காட்ட மீண்டும் காந்தியடிகளே கோரப்பட்டார்.

தனிப்பட்டவர் சட்ட மறுப்பு

மீண்டும் போர் எதிர்ப்புக்கு அறிகுறியாகக் காந்தியடிகள் அறப்போராட்டம் தொடங்கினார். ஆனால், இத்தடவை அது பொதுப்போராட்டமாகவும் தொடங்கப்படவில்லை; பேரவைப் போராட்டமாகவும் தொடங்கப்படவில்லை; அரசாங்கப் போர்க்கொள்கையை மட்டும் கண்டித்து அப்போர் முயற்சிக்குக் குந்தகம் விளைவிக்கக் கூடாதென்ற நோக்கத்துடன், அது காந்தியடிகளின் தலைமையில் தனிப்பட்டவர்கள் அறப் போராகவே தொடங்கப் பட்டது. இந்நோக்கத்துடனேயே முதல் அறப்போர்த் தலைவராகப் பேரவையினரல்லாத காந்திய டிகளின் ஆன்மிக மாணவரான வினோபா பவே தேர்ந்தெடுக்கப் பட்டார். அவரும், அவர் பின் பல தனிப்பட்டவர் களும், தலைவர்களும் சிறைப்பட்டார்கள். பத்திரிகைகளுக்கு அறப்போர்ச் செய்தி வெளியிடப்படாதென்ற தடை விதிக்கப் பட்டது. காந்தியடிகளின் 'ஹரிஜன்' பத்திரிகை முற்றிலும் நிறுத்தப்பட்டது.

அக்டோபர் 31-ஆம் தேதி ஜவஹர்லால் நேரு கைது செய்யப்பட்டு, 4 ஆண்டு தண்டனை பெற்றார். மௌலானா அபுல்கலாம் ஆஸாதுக்கு 18 மாதத் தண்டனை விதிக்கப்பட்டது. ராஜகோபாலாசாரியாரும் சத்தியமூர்த்தியும் சென்னையில் பேரெதிர்ப்புப் பிரசாரம் காரணமாகக் கைது செய்யப்பட்டனர்.

ஆன்மிக ஞானியான காந்தியடிகள் ஆட்சியாளர் மதவுணர்ச்சியை மதித்துக் கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது போராட்டத்தை நிறுத்தி வைத்திருந்தார். இந்தப் பெருந்தன்மை கூடப் பிரிட்டிஷார் உள்ளத்தில் விழலுக்கிறைத்த நீராயிற்று. 1940-ஆம் ஆண்டு முடிவுக்குள் இத்தனிப்பட்டவர் அறப்