பக்கம்:அப்பாத்துரையம் 12.pdf/241

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(220

அப்பாத்துரையம் - 12

போராட்டத்தில் பேரவைச் செயற்குழு உறுப்பினர் 11 பேர், பெருங்குழு உறுப்பினர் 176 பேர், முன் பேரவைக் கட்சி அமைச்சர்களாயிருந்தவர் 29 பேர், மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்களாயிருந்தவர் 22 பேர், மாகாணச் சட்டமன்ற உறுப்பினராயிருந்தவர் 400 பேர் சிறைக்கம்பிகளுக்குப் பின் தள்ளப்பட்டனர். நடுச்சட்ட மன்றத்தில் போரெதிர்ப்பு, போர்ச் செலவுகளுக்காகக் கொண்டு வரப்பட்ட சட்டப் பகர்ப்பின் தோல்வியாகச் செயலாற்றிற்று.

1941-ஆம் ஆண்டிலும் தனிப்பட்டவர் அறப்போர் தொடர்ந்து வந்தது. மொத்தம் 25,000 பேர் தண்டனைக்காளா யினர். தண்டத் தொகை மட்டும் ஆறு இலட்ச ரூபாய்க்கு மேலாயிற்று.

பேரவைக்கு வெளியேயுள்ள கட்சிகள் கூட நாட்டு நிலைபற்றி மிகவும் கவலை கொண்டன. மார்ச்சு 14-ஆந் தேதியிலும், ஜூலை 27-ஆந் தேதியிலும் கட்சிச் சார்பற்ற அரசியல் தலைவர்கள் பம்பாயிலும் பூனாவிலும் கூடி அரசியலாருக்கு எச்சரிக்கை விடுத்தார்கள்.

மாநில ஆட்சி முதல்வரின் செயலவை விரிவு

பேரவையின் கோரிக்கைக்குப் பிரிட்டிஷ் அரசியல் எந்த வழியிலும் இணங்க விரும்பவில்லை. ஆனால், பேரவை உதவியில்லாமல் இந்தியாவை நோக்கி விரைந்து அணுகி வரும் போர்ப்புயலைச் சமாளிக்க முடியாது என்பதையும் அவர்கள் உணர்ந்திருந்தார்கள்.1940 ஆகஸ்டிலேயே இந்தியத் தலைவர்களின் ஒத்துழைப்பைக் கோரி அவர் ஓர் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் போருக்குப் பின் இந்தியாவுக்குக் குடியேற்ற நாட்டுரிமை வழங்க ஏற்பாடு செய்வதே பிரிட்டிஷ் ஆட்சிக் குழுவின் நோக்கம் என்றும், அதுவரை ஆட்சிப் பொறுப்பிலும் போர் முயற்சியிலும் தம்முடன் இந்தியர் ஒத்துழைக்க வேண்டுமென்றும் அவர் தெரிவித்தார். இந்நோக்கத்துடனேயே தம் செயலாட்சிச் சபையை' விரிவுபடுத்த விரும்புவதாக அவர் அறிவித்தார். பேரவை இவ்வழைப்பை மறுத்துவிட்டது.

1941ல் மாநில ஆட்சித் தலைவர் மாநில ஆட்சிச் செயலவையின் கீழிருந்த ஆட்சித் துறைகளைப் பிரித்து மூன்று