பக்கம்:அப்பாத்துரையம் 12.pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இந்திய மக்கள் விடுதலை இயக்க வரலாறு

221

இந்தியர்களைச் சேர்த்துக் கொண்டு அவர்களுக்குப் புதிய துறைகளை வழங்கினார். தற்காப்பு, பிரசாரம் ஆகியவற்றுக்கு அவர்கள் தலைமையில் இரண்டு புதிய துறைகள் வகுக்கப்பட்டன. ஆனால், தற்காப்பிலிருந்து படைத்துறையாட்சி முன் கூட்டிப் பிரிக்கப்பட்டிருந்தது. அது தற்காப்பு அவை என்ற தனி நிலையத்தினிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. முஸ்லிம் சங்கத் தலைவர் ஜின்னா, பேரவையைப் போலவே இவ்விரண்டு நடவடிக்கைகளையும் கண்டித்திருந்தார். ஆயினும், மற்ற முஸ்லிம் சங்கத் தலைவர் பலர் தற்காப்பு அவையிலும் இந்தச் செயலாட்சி அவையிலும் பங்கு கொண்டு ஒத்துழைக்க முன் வந்தனர். செயலாட்சி அவையில் இடம் பெற்றவர் ஸர் சுல்தான் அகமது என்பவர். முஸ்லிம் சங்கம் இவர்களைக் கண்டித்ததன் மீது மூவர் பெற்ற பதவிகளைத் துறந்தனர். ஆனால், இச்சிலர் தவிர, ஏனையோர் பெற்ற பதவிகளை அணைத்துக் கொண்டு முஸ்லிம் சங்கத்திலிருந்தே விலகத் துணிந்தனர்!

தலைவர் பெருந்தகையின் மாய மறைவு

தலைவர் பெருந்தகை போஸ் மீது பேரவை மேலிடம் எடுத்துக் கொண்ட நடவடிக்கையின் பின்னும், வங்க மாகாணப் பேரவையில் அவர் செல்வாக்குக் குறையவில்லை. ஆனால், மேலிடம் வங்கப் பேரவைக்குழு முழுவதையுமே விலக்கி வேறு குழு அமைத்தது. வங்கத்தில் ஸி.ஆர்.தாஸுக்குப் பின் எப்போதுமே போஸ் கட்சி, ஸென்குப்தா கட்சி என்ற வேறுபாடு இருந்ததால், இது எளிதில் முடிந்தது ஆயினும் இச்சமயம் போஸ், நாலணா உறுப்பினராகக்கூட இல்லா விட்டாலும், ஒரு பெரிய இயக்கத்தை நடத்தினார். தம் தனிப்பட்ட செல்வாக்கினாலேயே கல்கத்தாவில் 1857-ஆம் ஆண்டில் நடைபெற்ற அடக்குமுறையின் சின்னமாயிருந்த ஒரு வெள்ளை யரின் சிலையை அப்புறப்படுத்த அவர் அவ்வியக்கத்தைத் தொடங்கி நடத்தினார். இது காரணமாக, அரசியலார் அவரை மீண்டும் சிறைப்படுத்தி, விசாரணை இல்லாமலே, எல்லை யில்லாத காலம் காவற்கைதியாக்கி வைத்தனர்.

இந்நிலைமையிலும் மக்கள் ஒரு துணைத் தேர்தலில் அவரை நடுச்சட்ட மன்றத்துக்குப் போட்டியில்லாமல் தேர்ந்தெடுத்துப் பெருமைப் படுத்தினார்கள். ஆயினும்,