பக்கம்:அப்பாத்துரையம் 12.pdf/243

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(222

அப்பாத்துரையம் - 12

அரசியலார் அவரைச் சிறையிலிருந்து விடுவிக்கவில்லை. தம் குடியுரிமை கோரிச் சுபாஷ் சாகும்வரை உண்ணா நோன்பிருக்கத் துணிந்தார். அவர் துணிச்சலை நன்கறிந்திருந்த அரசியலார், அவரை விடுதலை செய்து, அவர் வீட்டிலேயே காவற் கண்காணிப்பில் வைத்தனர்.

சூழ்ச்சிப் புலிகளான வெள்ளையர்கள் சூழ்ச்சி வலைகளை வெல்ல, போஸ் தம் துணிகரத் திட்டங்களை வகுத்தார். நோன்பிருப்பதாகக் கூறி உள்ளூற அவர் வேறு ஏற்பாடுகளைச் செய்துவந்தார். அவற்றின் பயனாக 1941, ஜனவரி 26-ஆந் தேதி அவர் திடீரென்று காணாமற்போய்விட்டதாகத் தெரிய வந்தது.

பிரிட்டிஷாரன் துப்பறியும் திறன் முழுவதும் அவர் தப்பிய வகை காணவோ, தப்பிச் சென்ற இடங்காணவோகூடப் பயன்படவில்லை. அவர் ஆப்கானிஸ்தானம் வழியாக ஜெர்மனிக்குத் தப்பிச் சென்றுவிட்டார் என்பது இரண்டோர் ஆண்டுகளின் பின்பே பிரிட்டிஷாருக்குப் புலப்பட்டது!

கிரிப்ஸ் திட்டம்

து

1942-ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே இந்தியாவின் அரசியல் முட்டுக்கட்டை நிலையை மாற்றியமைக்க ஏதாவது புது முறையைக் கையாண்டாக வேண்டுமென்ற கருத்து, பிரிட்டிஷ் அரசியல் மன்றில் வளர்ந்தது. இந்தியா-பிரிட்டன் அரசியல் தொடர்பில் இது ஒரு புது மாறுதலை உண்டு பண்ணிற்று என்பதில் ஐயமில்லை. ஆனால், பிரிட்டன் இதுவரை மேற்கொண்டு வந்த பிடி முரண்டுப் போக்கும், பிரிட்டனின் பிற்போக்குக் கும்பல் செய்து வந்த இந்திய தேசீய இயக்க எதிர்ப்பும் கலந்து, இந்தியாவில் மனக்கசப்பையும் பிரிட்டிஷார் மீது நம்பிக்கையின்மையையும் வளர்த்திருந்தன. இம்மனக்கசப்புக் கோட்டையைத் துளைத்துப் புதிய பிரிட்டன்- இந்தியா உறவை ஏற்படுத்தப் பிரிட்டிஷார் மேற்கொண்ட முதல் முயற்சியாக, கிரிப்ஸ் திட்டத்தைக் கருதலாம்.

பிரிட்டனின் எல்லாக் கட்சியினரும் கலந்து ஆராய்ந்த முடிபுகளுடளே, பிரிட்டனின் முன்னணிக் கட்சியாகிய