பக்கம்:அப்பாத்துரையம் 12.pdf/245

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(224

அப்பாத்துரையம் - 12

இந்தியாவின்மீது படையெடுப்புப் பற்றிக் காந்தியடிகள்

உலகப் போர் இந்தச் சமயத்தில் கீழ்த்திசையில் உச்ச நிலையை எட்டியிருந்தது. ஜப்பானின் மின்னல் தாக்குதல்களுக்கு காளாய், மலேயாவும், பர்மாவும் ஜப்பானின் காலடியில் கிடந்தன. இந்தியக் கடல்களில் பிரிட்டிஷ் ஆதிக்கம் மறைந்துவிட்டது. அவை ஜப்பானின் தனிப்பட்ட வேட்டைக் குளங்கள் ஆயின. எந்தக் கணத்திலும் இந்தியாவின் நீண்ட கடற்கரையோரத்தில் அவர்கள் தாக்குதல் தொடங்கலாம் என்ற நிலை இருந்தது. 'கிரிப்ஸ்' திட்டம் இந்தியர் உள்ளங்களை நம்பிக்கை ஒளி காட்டிச் சிறிதுகாலம் மயக்கி வைக்கும் ஒரு சூழ்ச்சிதானோ?' என்று அச்சமயம் இந்தியர்களுக்குத் தோற்றிற்று.

1941 தொடக்கத்தில் மாயமாய் மறைந்த சுபாஷ் போஸ் உண்மையில் ஜெர்மனிக்கே சென்றிருந்தார் என்ற செய்தி ஓராண்டுக்குள் எல்லாருக்கும் தெரிந்துவிட்டது. அத்துடன் ஜப்பானின் உதவியுடன் அவரே இந்தியாமீது தாக்கும் படையின் தலைமை தாங்கியுள்ளார் என்ற செய்தியும் பரப்பப்பட்டுவந்தது. இது பற்றி (இப்போது மீண்டும் வெளியிடப்பட்டு வந்த) ஹரிஜன் பத்திரிகையில் காந்தியடிகள், “வெளியார் ஆட்சியிலிருந்து விடுபடும் நம் முயற்சியில் வேறு எந்த அயல் நாட்டையும் அணுகித் தொல்லைப்படுத்தும் எண்ணம் எனக்கில்லை. அத்துடன் பிரிட்டிஷ் அடிமைத் தனத்துக்குப் பதில் வேறு அடிமைத் தனத்தைப் பண்டமாற்றுச் செய்வதிலும் எனக்கு விருப்பம் இல்லை. தெரியாத எதிரியைவிடத் தெரிந்த எதிரியே மேல் என்று நான் எண்ணுவதால், சுபாஷின் கொள்கையை நான் ஆதரிப்பதென்பது கருதிப் பார்க்கக்கூட முடியாத செய்தி. அவர் வழி தவறிவிட்டார். அவர் வழி ஒரு நாளும் இந்தியாவை விடுதலை நோக்கி அழைத்துச் செல்லமாட்டாது" என்று எழுதினார்.

"ஜப்பானை இந்தியாவுக்கு வரவழைக்கிறேன் என்ற குற்றச்சாட்டை என் முழு வலிமையுடன் மறுக்க விரும்புகிறேன்! இந்தியாவின் ஒவ்வொரு மனிதனும் ஜப்பானை எதிர்த்து நிற்க வேண்டுமென்றுதான் நான் விரும்புகிறேன்.

"ஜப்பானைத் தடுப்பதில் பிரிட்டிஷாருக்கு இருக்கும் அக்கறையை விட எனக்கு மிகுதியான அக்கறை இருக்க