இந்திய மக்கள் விடுதலை இயக்க வரலாறு
(225
வேண்டும். ஏனெனில், இந்தியக் கடலில் பிரிட்டன் தோற்கு மானால், பிரிட்டனின் நட்டம் இந்தியாவை இழப்பதுடன் நிற்கும். ஆனால் இந்தியா அதனால் தன்னையே முழுதும் இழந்துவிட நேரும்.'
"2
'இந்தியாவை விட்டு வெளியேறு”- காந்தியடிகள்
விளக்கம்
ஜப்பான் வகையில் காந்தியடிகள் கருத்து இங்கே தெளிவாக்கப் பட்டுள்ளது. ஆனால், பின்னாளில் ஏற்பட் படையெடுப்பு, காந்தியடிகள் எண்ணியதுபோல ஜப்பானின் படையெடுப்பன்று. அது ஜப்பானின் நேர்முக உதவி யில்லாமல் விடுதலை இந்திய அரசாங்கப் படையின் தலைமை யிலும், போஸின் தலைமையிலும் நடைபெற்ற தாயக விடுதலைப் போரேயாகும். இந்தச் செய்தியைக் காந்தியடிகள் அன்று அறிந்திருக்கவும் முடியாது. அறிந்திருந்தாலும், அறிந்து வெளியிட்டிருக்க முடியாது என்று கூறத் தேவையில்லை. அத்துடன் காந்தியடிகள், நாட்டு விடுதலைக்காகப் போரை ஆதரிக்கவில்லை. ஆன்மிகப் போராட்டத்தாலேயே இந்தியா விடுதலை பெற முடியும் என்பதே அவர் நம்பிக்கை என்பதை நாம் மறக்க முடியாது.
க்
ஆனால், பிரிட்டிஷ் ஆதிக்கம் பற்றிக் காந்தியடிகள் என்ன நினைத்தார் என்பதை ஹரிஜன் பத்திரிகையிலேயே அவர் சுட்டிக் காட்டினார். “பிரிட்டிஷார் இந்தியாவில் இருப்பதுதான் இந்தியா மீது படையெடுக்கும்படி ஜப்பானை அழைக்கிறது. பிரிட்டன் விலகினால், இந்த அழைப்பு இராது” என்பது காந்தியடிகள் கூற்று. ஆகஸ்டில் வெளியிடப்பட்ட ‘இந்தியாவை விட்டு வெளியேறு' என்ற பேரவையினர் தீர்மானத்தின் மூல விதையும் முதிர்ந்த விளக்கமும் காந்தியடிகளின் இவ்வாசகத்தில் அடங்கியிருக்கின்றன.
பிரிட்டிஷ் வெளியேற்றம், இந்தியாவின் விடுதலை ஆகிய இரண்டின் விளக்கமும் அவராலேயே திறம்படத் தரப்பட்டிருக் கின்றன: “பிரிட்டன் வெளியேறி, இரு நாடுகளுக்குமிடையே, இரு நாடுகளுக்கும் பெருமதிப்பு வாய்ந்த ஓர் ஒப்பந்தம் ஏற்படுமானால், அதன் பயனாக,