(226
அப்பாத்துரையம் - 12
(1) "இந்தியாவின் பொருளியல் சுமைகளிலிருந்து உடனே விடுதலை கிடைக்கும்.
(2) “ஆண்டுதோறும் உயர்பணியாளர் ஓய்வு ஊதிய மாகப் பிரிட்டனுக்கு இறைக்கப்படும் பொருள் அழிவு, உடனடியாக நிற்கும்.
(3) “புதிய அரசியல் புதிதாகச் சுமத்த விரும்பினாலல் லாமல், அல்லது நீக்காது வைத்துக்கொள்ள விரும்பினாலல் லாமல், மக்களுக்கு வரிப்பளுவின் சுமை இராது.
(4) "மாநிலத்தின் மிகச்சிறந்த தலைவர்களைக்கூட அழுத்தி அமிழ்த்தி வைத்துக் கொண்டிருக்கும் அடிமை மனப்பான்மையாகிய பளு அகலும்.
(5) “அன்பற முறையிலேயே நான் போர்களை நடத்த எண்ணுவதால், இந்தியாவின் வரலாற்றில் நான் ஒரு புத்தூழி ஏற்படுத்துவேன்.'
""
காந்தியடிகளுடன் கலந்து பேரவைச் செயற்குழு ஜூலை, 24-ஆம் தேதி ஓர் அறிக்கை வெளியிட்டது. அது காந்தியடிகள் கருத்தையே வலியுறுத்திற்று. அத்துடன், விடுதுலை உறுதி தரப்பட்டால், ஜப்பானை எதிர்த்து நடத்தப்படும் போரில் முழு மனத்துடன் ஒத்துழைக்க உறுதி கூறுவதாகவும், பிரிட்டன் மறுத்தாற்கூட அறப்போர் மூலம் இந்தியா தன் பாதுகாப்புக்கும் விடுதலைக்கும் ஒருங்கே போராட முனைந்திருப்பதாகவும் செயற்குழு தெரிவித்தது. விடுதலை தரப்பட்டால், நேசநாடுகள் படைகள் தங்குவதற்கு இணக்கமளிக்கப்படும் என்ற விளக்கமும் தரப்பட்டிருந்தது.
ஜூலை 18ல் காந்தியடிகள் ஜப்பானுக்கு ஓர் எச்சரிக்கையும், அமெரிக்க நண்பர்களுக்கு ஒரு நிலைமை ஒரு நிலைமை விளக்கமும் அனுப்பினார்.
‘மரத்தால் பூட்டமைக்கப்பட்டு இரும்புப் பாளங்களால் உறுதி செய்யப்பட்ட கோட்டை' என்று பிரிட்டிஷ் ஆட்சிக் குழுவைக் குறிப்பதுண்டு. இப்போது அதன் வாய் திறவா நிலை இது போன்றிருந்தது. ஆகஸ்டு 7-ஆந் தேதி பேரவைப் பெருங்குழு பம்பாயில் கூடிற்று. மௌலானா ஆஸாது, மகாத்துமா காந்தி,