பக்கம்:அப்பாத்துரையம் 12.pdf/249

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(228

அப்பாத்துரையம் - 12

"அமைதி நாடி உழைக்கும் உழைப்பில் நான் என் நாடி நரம்புகளுள் ஒவ்வொன்றையும் ஈடுபடுத்துவேன்! இவ்வகையில் உலகையே எதிர்க்கவும் நான் தயங்கமாட்டேன்! ஏனெனில், கடவுள் நம் பக்கம் இருக்கிறார். இந்தியா முழுதும் என்னைக் கைவிட்டாற்கூடநான் தனித்துநின்று உலகையே எதிர்க்கத் தயங்க மாட்டேன்! ஏனெனில், பேரவை எத்தகைய குற்றமும் செய்துவிடவில்லை. பேரவைக்கு நான் என் உறுதியைக் கூறிவிட்டேன். இனிப் பேரவை கடமையாற்றும்; அல்லது கடமைக்காக மாளும்.

66

'உங்களை இந்தப் போராட்டத்தில் நடத்திச் செல்லும் பொறுப்பை நான் ஏற்றுக் கொண்டிருக்கிறேன். ஆனால், அது உங்கள் படைத் தலைவன் என்ற முறையிலன்று; உங்கள் ஊழியன் என்ற முறையில்! உங்களிடையே யார் முதன்மையான சேவை செய்பவரோ, அவரே தலைமைக்குரியவர். நான் உங்கள் ஊழியர்களிடையேதான் முதல்வன். என் மனப்பாங்கு இது இம்மனப்பாங்குடன் நான் உங்களை எதிர்நோக்கி வரும் இன்னல்களிலெல்லாம் உங்களுடன் பங்கு கொள்வேன்".

தீர்மானத்தின் படிகளை அமெரிக்கத் தலைவருக்கும், சீனாவுக்கும் அனுப்பியதாக மௌலானா அபுல்கலாம் ஆஸாது கூறினார்.

பசுப்போன்ற பாரத மக்களின் சீற்றம்

8

ஆகஸ்டு 8 தீர்மானம் புரட்சிகரமானது என்பதற்கு விளக்கம் தேவையில்லை. பிரிட்டிஷ் அரசியலின் செயலே அதை விளக்கி விட்டது.தீர்மானத்தில் கையெழுத்திட்ட மைக்கோல்களில் மை உலருமுன்பே பேரவைக் குழுவினர் அத்தனை பேரும் அரசியலின் மறை விருந்தினர் ஆயினர். பேரவையின் தீர்மானம் பேரவைக்கு வெளியே முறைப்படி வெளியிடப்படாமலே தடுக்க அவர்கள் முனைந்தார்கள். ஆனால், இது நெருப்புக்குஞ்சைப் பஞ்சுப் பொதியில் சுற்றிவிரிந்து பொதிந்த கதையாகத் தான் முடிந்தது!

கொலைகாரன் பரபரப்பே கொலைகாரனைக் காட்டிக் கொடுப்பதுபோல், அரசாங்கத்தின் பரபரப்பே பேரவையின் ‘வாய் பேசாக் கட்டளை’களின் தூதுவனாயிற்று!