பக்கம்:அப்பாத்துரையம் 12.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




4

அப்பாத்துரையம் - 12

1885ல் தமிழகத்திலும் தழைத்தது. 'பிரமஞான சபை' அதற்குத் துணையாய் அமைந்தது. தாயுமானவர், இராமலிங்க வள்ளலார். மறைமலையடிகளார் போன்றார் தொண்டும் இடம் பெறுகின்றது. வ.உ. சிதம்பரனார், திரு.வி. கலியாண சுந்தரனார் ஆகி கியோர் தொடர்பு வலியுறுத்தப்படுகின்றது.

'காந்தி ஊழி' சிறந்து விளங்குகின்றது. 'வானவில்' இன்றைய, செய்திகளைச் செப்பமாகக் காட்டுகின்றது. விடுதலை யக்கத்தை அறிதல் மீளவும் அடிமைத்தளையில் அகப்படா திருக்கத் துணை புரியமல்லவா?

நூல் நடை சிறந்து நிற்கின்றது. எனினும், ஓரோர் இடத்தில் மிக இறுகிய பாலாகச் சுவையூட்டுகின்றது.

வாழ்க பாரதம்!

முத்து. இராசாக்கண்ணனார், M.A.,B.O.L

26-1-1954 சென்னை.

தமிழ்ப் பகுதித் தலைவர்

அரசினர் கலைக் கல்லூரி,