பக்கம்:அப்பாத்துரையம் 12.pdf/250

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இந்திய மக்கள் விடுதலை இயக்க வரலாறு

(229

வெல்லிங்டன் ஆட்சியின் மறுபதிப்பாக லின்லித்கோவின் ஆட்சியும் உருமாறிற்று.உண்மையில் அந்த ஆட்சியைக் கூட அது தாண்டிற்று.

பேரவைக் குழுக்கள் சட்டவிரோதமாக்கப்பட்டன. எங்கும் கூட்டங்கள், ஊர்வலங்கள் மீது தடைகள் பிறந்தன. முன்பே திட்டமிட்டு நடக்க இருந்த பேரவைத் தொண்டர் அணிவகுப்பு மீது பம்பாயில் திடுமெனக் கண்ணீர்ப்புகை வீசப்பட்டது. தடியடிகளும் துப்பாக்கிக் குண்டுகளும் தாண்டவமாடின. தேசியக் கொடிகள் முன்னெச்சரிக்கையின்றிக் கிழித்துத் துவைத்தெறியப் பட்டன. கொடியைக் காக்க முனையுமுன்பே, காக்க எண்ணியவர்கள் உலகினின்றே கடத்தப்பட்டார்கள்.

நாஜியர் பிரிட்டன்மீது தொடுத்த முறைகளை ஆட்சியாளர் நாஜியர்மீது தொடுக்க முடியாமல், ஆயுதமற்ற இந்தியர்மீதே தொடுக்க முனைந்து விட்டனரோ என்று தோன்றிற்று.

பாரத நாட்டின் வடிவம் பசுவின் வடிவம் போன்றது என்று கூறப் படுகிறது.பொதுவாக அதன் பண்பும் பெரும்பாலும் பசுவின் பண்பாகவே என்றும் இருந்து வந்துள்ளது. எளிய வாழ்வு வாழ்ந்து அது உலகுக்கு உயரிய குறிக்கோள்களைத் தந்துள்ளது. ஆனால், கன்றைப் புலியிடமிருந்து காக்க முனையும் பசுவிடமும் புலியின் பண்பு வந்துவிடுவதுண்டு.

மாநிலத்தின் மானங்காத்த தந்தையைச் செயலற்ற நிலையில் தம்மிடமிருந்து அரசாங்கம் மறைக்க முனைந்தபோது மாந்தருலகில் ஒரு மாணிக்கமாய் நின்று இந்தியர் உள்ளங்களில் மணிமுடி தரிக்காத மன்னராய் நிலவிய அவர் ஒப்பற்ற மைந்தனைத் தாயகத்தின் மடியிலிருந்து அப்புறப்படுத்தியபோது, பேரவையின் எல்லா உறுப்புகளையும் அரசியலார் ஒருங்கே கட்டுப்படுத்தி, மக்களிடமும் வீம்பு காட்டி அவர்களை அவமதித்த போது, இந்திய வரலாற்றிலேயே முதல் தடவையாக, பாரத மக்கள் தங்களையும் தங்கள் நிலைமையையும் எதிரியின் நிலைமையையும் மறந்து சீறி எழுந்தார்கள்!

ஆகஸ்டு 9க்கும் ஆகஸ்டு 14க்கும் இடையே அரசியலார், கண்மூடி அடக்குமுறைகளை வீசினர். தலைவர்களுடன் 8-ஆந்