230 ||-
அப்பாத்துரையம் - 12
தேதி சிறை செய்யப்படாத பியாரிலால் போன்ற அரசியல் சார்பற்ற நண்பர்களும், காந்தியடிகளின் வாழ்ககைத் துணைவியாரான அன்னை கஸ்தூரிபாய் காந்தியும், டாக்டர் சுசீலா நய்யாரும் கைது செய்யப்பட்டனர். ஆகாய விமானத்திலிருந்து பல கூட்டங்களில் குண்டுகள் வீசப்பட்டன. ஆனால், இத்தனையும் வாளாது பொறுத்திருந்த இந்தியா, நேரடியாகத் தலைவர்களிருக்கும்போதுகூடத் திட்டமான போராட்டம் நடத்துவதில் பெருந்தொல்லைகள் தந்த இந்தியா, இப்போது தானே தனக்குத் தலைமையாய் ஒரே நாளில் கண்ணை மூடிக் கொண்டு செயலாற்றிவிட்டது! தேசப் பட்டிகையில் ஆகஸ்டு 14-ஆந் தேதி கிழிக்கப்பட்டதோ இல்லையோ, எங்கும் மக்கள் செயலாற்றினார்கள். ஒரே நாளில் அரசாங்கம், மாநில அரசாங்கம் என்ற முறையில் செயலிழந்தது.
சீமூர், அஷ்டி, குலசேகர பட்டணம், தேவகோட்டை கோர்சாத்து, நாடியாட், தென்னாலி, மன்னார்குடி- எங்கும் புரட்சித்தீ கிளம்பிற்று.
தண்டவாளங்கள் பெயர்ந்தன சில இடம்! தந்திக் கம்பிகள் அறுந்தன வேறு சில இடம்! சிறைக்கம்பிகள் முரிந்தன ஒரு திசை! பணிமனைகள் தகர்ந்தன. மற்றொரு திசை! அநீதியும் நீதியும் கலந்து வழங்கிய நீதிமன்றங்கள் பல அன்று மக்கள் நீதி என்னும் று நெருப்புக்கு ஆளாயின! மக்களை அச்சுறுத்திய பலர், அன்று அஞ்சி நடுங்கி உயிர் காக்க ஓடி ஒளிந்தனர்!
ஆகஸ்டு 15! ஆகஸ்டுப் புரட்சி! அஹிம்ஸைக்குப் பேர் போன நாட்டில் இப்புரட்சி முன்னெச்சரிக்கையின்றி வந்து, 'பின் விளக்கம்' எதுவும் கூறாமல் சென்றுவிட்டது.
ஆகஸ்டு பற்றிய இரு கருத்துகள்:
ஆகஸ்டுப் புரட்சி பற்றி இந்தியரிடையே இரண்டு வகைக் கருத்துடையார் இருக்கலாம். இருப்பதில் தவறில்லை. பேரவைத் தலைவர்களிலையே அதனை ஆதரித்தவரும் உண்டு; ஆதரிக்காது ஒதுங்கி நின்றவரும் உண்டு. ஆனால், இந்தியாவின் சார்பில் பேசுபவர்கள் அதன் நேர்மை, நேர்மைக் கேடுகளைவிட, அதன் உடனடி தொலைப் பயன்களிலேயே கருத்துச் செலுத்துவார்கள். உடனடிப் பயன் யாதெனில், அது இந்தியாவின் தன்மானம்