பக்கம்:அப்பாத்துரையம் 12.pdf/252

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இந்திய மக்கள் விடுதலை இயக்க வரலாறு

(231

காத்தது என்பதே, இதில் கருத்து வேற்றுமைக்கு இடமில்லை. கருத்து வேறுபாடு தொலைப்பயன் வகையிலேயே ஏற்பட முடியும்.

ஆகஸ்டுப் புரட்சியின் தொலை அரசியல் விளைவு, பிரிட்டிஷார் இந்தியாவை விட்டு வெளி ஏறப் பெருந்துணை செய்தது. பிரிட்டிஷார் வெளியேற்றத்துக்கு வேறு பல துணைக்காரணங்கள் இருந்திருக்கலாம்; இருந்தன. ஆனால், இது அவற்றுள் ஒன்று என்பதிலும், போஸின் வீரப்படை வீரர் துணிகர வெற்றி அதில் இரண்டாவது என்பதிலும், இந்தியர் இவற்றின்பின் காட்டிய ஒற்றுமை அதில் மூன்றாவது என்பதிலும், ஐயமில்லை. பிரிட்டனின் தணிந்து வரும் மதிப்பையும், தன் மதிப்பையும் அது ஊறுபடுத்திற்று என்பதும் மறுக்க முடியாத உண்மை. ஆனால், அதே சமயம் அயலாட்சியை ஒழிக்கும் முயற்சியை இச்செயல்கள் மூலம் சாதித்ததன் பயனாக ஏற்பட்ட மற்றொரு தொலை விளைவும் உண்டு. விடுதலை ஆட்சியில் ஆளுபவர்களுக்கு ஆளும் திறனையோ, மக்களுக்குச் சட்டத்தின் மீது மதிப்பையோ உண்டு பண்ண இப்புரட்சி உதவவில்லை என்பது தெளிவு.

ஆனால், ஆகஸ்டு 15 ஒரு தனி மனிதன் செயலன்று, ஒழுக்க முறைகளுக்குக் கட்டுப்பட! காந்தியடிகளின் ஆன்மிக முறைப்படி அரசியலை அலசுவதானால், ஆகஸ்டுப் புரட்சி மட்டுமன்றி ரஷ்யாவின் செப்டெம்பர்ப் புரட்சியும், சீனப்புரட்சியும், விடுதலை நாடுகள் நடத்தும் போராட்டங்களும், போஸின் வீரப் போராட்டங்களுங்கூடத் தவறானவையாகத்தான் கருதப்பட நேரும் என்பதைநாம் மறந்துவிடக் கூடாது. 'காந்தீயம் முற்றிலும் பொருந்துவது வருங்கால உலகுக்கு; இன்றைய உலகுக்கல்ல,’ என்று நம்மால் கூறாமலிருக்க முடியாது.

தமிழகத்தின் எச்சரிக்கைக் குரல்: ராஜகோபாலாசாரியார்:

ஆகஸ்டுப் புரட்சியை எதிர்த்தவருள் முக்கியமானவர் சக்கரவர்த்தி ராஜகோபாலாசாரியார் ஆவர். அவர் தமிழகம் தந்த மாநிலப் பெரியார்களுள்ளும் உலகப் பெரியார்களுள்ளும் ஒருவராக எண்ணத்தக்கவர். ஆன்மிக வழியில் காந்தியடிகள் எவ்வளவு பெரியவரோ, வீரப் போராட்ட வழியில் தலைவர்