232 ||-
அப்பாத்துரையம் - 12
பெருந்தகை போஸ் எவ்வளவு ஒப்பற்றவரோ, வணங்காமுடி எதிர்ப்பாளருள் கப்பலோட்டிய தமிழர் வ.உ. சிதம்பரனார் எவ்வளவு ஈடும் எடுப்பும் அற்றவரோ, அந்த அளவு பிரிட்டனின் சூழ்ச்சித்திறத்தையும் எதிர்த்துத் தகர்க்கும் அரசியல் திறத்தில் ராஜகோபாலாசாரியாரும் ஒப்புமை யற்றவர் என்பதில் ஐயமில்லை. பெரியாருடன் பெரியார் முரண்படும் முரண்பாட்டிலிருந்தே, நேர் மின்சாரம், எதிர் மின்சாரங்களின் முரண்பாடுகளிலிருந்து வரும் ஒளி போன்று உலக அறிவு மலர வேண்டும் என்பதை நாம் மறப்பதற்கில்லை.
ராஜகோபாலாசாரியார் காந்தியடிகளின் சீடர். ஆனால் அவர் நடுவுநிலை கோடாச் சமநிலை அமைதியுடையவர். ஒரு குறிப்பிட்ட எல்லைக்கப்பால் காந்தியடிளின் அறநெறியிட மிருந்து அவர் நேரடியாக விடை பெற்றுக் கொண்டவர். ‘அறநெறி பற்றியே ஆராய்ந்து ஆராய்ந்து காந்தியடிகள் மூளை கோளாறு கண்டு விட்டது!' என்று கேலி செய்ய அவர் தயங்கவில்லை. ஆகஸ்டுப் புரட்சித் தீர்மானத்தைப் பேரவைக் குழுவின் கூட்டத்திலேயே அவர் எதிர்த்தார். அதன்படி அவர் அதில் பங்கு கொள்ளவும் மறுத்தார். போர் மூலம் விடுதலை பெறத் துணிந்தவர் போஸ்; புரட்சி மூலம் அதைப் பெற எண்ணியவர் காந்தியடிகள்: ஆனால், ஒற்றுமை மூலம் பெறவே ராஜகோபாலாசாரியார் திட்டமிட்டார். பிரிவினை நோக்கிச் சென்று கொண்டிருந்த பேரவையின் இயக்கத்தேருக்கு முட்டுக்கட்டையிட அவர் முன்வந்த ஒன்றிலிருந்தே நாம் இதை அறியலாம்.
ஜின்னாவிடம் சமரஸப் பேச்சுத் தொடங்க வேண்டும் என்றும்; முஸ்லிம்கள் தன் முடிபுரிமையை ஏற்று அவருடன் வாதாடவேண்டுமென்றும் கிரிப்ஸ் திட்டத்தின் போதே ராஜகோபாலாசாரியார் எண்ணினார். கிரிப்ஸ் திட்டம் இந்த அடிப்படையில் அமைந்திருப்பதால், பிரிவினைவாதிகளை அன்பு முறையில் இணைக்க அது உதவும் என்று நினைத்ததாலேயே, எவரும் தீண்டாத அந்தத் திட்டத்தை அவர் ஆதரிக்க முனைந்தார். காந்தியடிகள் அவர் போக்கை ஓரளவு உணர்ந்து கொண்டார் என்னலாம். ஏனெனில், ராஜகோபாலாசாரியார் ஜின்னாவுடன் பேசுவதற்குக் காந்தியடிகள் சிறையிலிருந்து ஆதரவு தந்ததுடன் பின்பு தாமே அதே வழியில் செல்லவும்