இந்திய மக்கள் விடுதலை இயக்க வரலாறு
[233
முனைந்தார், ஆயினும், நன்றோ, தீதோ, இருவர் முயற்சிகளும் தோற்றன.
பேரவையும் முஸ்லிம் சங்கமும் சென்ற போக்கு விடுதலையைக் கொணர்ந்தது; ஆனால், பிரிவினையையும் தந்தது என்பதை விடுதலை இந்தியாவில் வாழும் நாம் இப்போது காணலாம்.
ராஜகோபாலாசாரியார் மற்றத் தலைவர்களைப் போலவே எல்லா வகைத் தியாகமும் செய்தவர். ஆனால், ஆனால், தமது கருத்துக்காகச் சரியாகவோ, தப்பாகவோ அவர் செய்த தியாகம் மிகமிகப் பெரிது! அது சரியென்பதைக் காலப்போக்குத்தான் காட்டுகிறது. ஆனால், தியாகம் பெரிது என்பதைக் காலப்போக்கு மறந்துவிடச் செய்யவே உதவுகின்றது. காந்தியடிகள் ஆதரவை எவரும் அறியாதநிலையில் அவர் ஜின்னாவின் பக்கத் திரும்பியதற்காக, மாநிலப் பேரவையின் பெரும்பாலான ஆதரவாளர் சீறினர். அதே சமயம் தமிழகம் அவர் இந்திக் கொள்கைக்காக ஒருபுறம், அவர் ஆகஸ்டு எதிர்ப்புக்காக மறுபுறம் என இருபுறமிருந்து அவரைப் பழிவாங்கிற்று. அவர் தமிழகத்திலிருந்து வடக்கேயும், வடக்கிலிருந்து காந்தியடிகள் மடி மீதும் பந்து போலத் தூக்கி எறியப்பட்டார். இத்தனையும் கடந்து அவர் மீண்டும் அரசியலில் இடம் பெற்றது காலத்தின் செயலன்றி வேறன்று என்னலாம். விடுதலை இந்தியாவின் தொண்டில் அவர் என்றும் சளைக்கவில்லை.
அரசியல்முட்டுக்கட்டை நிலை
ஆகஸ்டுப் புரட்சிக்குப் பேரவைத் தலைவர்களே காரணம் என்று அரசியலார் நேர்முகமாகவும், மறைமுகமாகவும் குற்றஞ் சாட்டினர். பேரவைத் தலைவர்கள் இக்குற்றச்சாட்டை மறுத்தார்கள். பேரவைத் தலைமை இல்லாதபோது மக்கள் நிலை தடுமாறிச் செய்த செயலே அது என்று அவர்கள் விளக்கங்காட்டினார்கள்.
அரசியல் நிலை சீர் கெட்டுவிடாக் கூடாதென்று எண்ணிய நேர்மைவாதிகள் அனைவரும் தலைவர்களை விடுதலை செய்து நிலைமையைச் சீர்படுத்தும்படி அரசியலாரை வேண்டினர். ஆனால், அரசியலாரோ, இப்போது ஆன்மிகவாதிகளாக