பக்கம்:அப்பாத்துரையம் 12.pdf/255

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(234

அப்பாத்துரையம் - 12

மாறினர். செய்தவர்கள் நாங்களே; அது தவறு; மன்னிப்புக் கோருகிறோம்' என்ற அறிக்கையை எதிர்பார்த்துத் தம் செயலின்மையை வலியுறுத்தினர்.

இத்தகைய வீம்புப் பேச்சுகளில் ஆண்டுகள் சென்றன; அடக்கு முறைகள் நீண்டன; மக்கள் மனக்கசப்பு வளர்ந்தது.

1943, ஜனவரி, 6இல் பத்திரிகைக் கட்டுப்பாடுகளை எதிர்த்து மாநிலமுழுதும் பத்திரிகைகள் ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்தன. பிப்பிரவரி 16லிருந்து 'கலவரத்துக்குப் பேரவையின் பொறுப்பு' என்ற அரசியல் சார்பான வெளியீட்டுக்குக் கண்டனமாகக் காந்தியடிகள் 21 நாள் உண்ணா நோன்பு ஆற்றினார்.

1943, மார்ச்சு,15-ஆந் தேதி வரை தண்டிக்கப்பட்டவர் 34,895 பேர் என்றும், காவலிலிருப்பவர் 16,623 பேர் என்றும் பிரிட்டிஷ் மன்றத்தில் இந்தியா அமைச்சரான அமெரி, மே 20-ஆம் தேதி கூறினார்.

வீம்புப் போராட்டமே நிலைமையை என்றும் சரிப்படுத்த முடியாதென்பதைப் பிரிட்டிஷார் கண்டனர்; நிலைமையில் மாற்றம் ஏற்படுத்த மீண்டும் முயலத் தொடங்கினர். ஜூன் 18ல் கீழ்த்திசை நாடுகளில் போரில் ஈடுபட்டுப் பழக்கமுடைய தலைவர் வேவல் ஆட்சி முதல்வராக அனுப்பப்பட்டார். படைத் துறையாளர் அனுப்பப்பட்டது பலருக்கு முதலில் மனத்தாங்கல் தந்தது. ஆயினும், வேவல் முற்றிலும் படைத்துறைப் போக்கில் நடந்து கொள்ளவில்லை. இந்தியாவின் அரசியல் சிக்கலைத் தீர்க்க முடியா விட்டாலும், தீர்ப்பதற்கான சூழ்நிலையை அவரால் ஓரளவு உண்டு பண்ண முடிந்தது.

இவ்வாண்டில் சென்னை சத்தியமூர்த்தியை இழந்தது.

ச்சமயம் வங்கத்தில் எழுந்த பஞ்சநிலை அரசியல் இருளை இன்னும் இருள் மயமாக்கிற்று. மக்கள் நினைவுக்குள் இது போன்ற பஞ்சம் இதற்கு முன் நேர்ந்ததில்லை. பெரும் போர்களில் ஆண்டுக்கணக்கில் ஏற்படும் அழிவை இது மக்களிடையே மாதக் கணக்கில் உண்டு பண்ணிற்று. உணவின்றி மக்கள் புழுவாய்த் துடித்தார்கள். ஓராண்டுக்குள் உணவின்றி இறந்தவர் 11/2லட்சம் பேர் என்பது கூறப்படுகிறது.