பக்கம்:அப்பாத்துரையம் 12.pdf/256

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இந்திய மக்கள் விடுதலை இயக்க வரலாறு

(235

1944 பிப்ரவரி 22ல் அன்னையார் கஸ்தூரிபாய் சிறைத்துன்பம் தாளாது மாண்டார்! நாடெங்கும் துயர் கொண்டாடிற்று. அன்னையாரின் பெயரால் கோடிக்கணக்கில் நாடு நிதியளித்து அன்னையரினத்தின் துயர் களைய முன் வந்தது.

காந்தி – ஜின்னா பேச்சுக்கள்

மே மாதம் 6-ஆந் தேதி காந்தியடிகன் விடுதலை செய்யப்பட்டார்.ராஜகோபாலாசாரியார் ஜின்னாவுடன் மூன்று ஆண்டுகளுக்கு முன் நடத்திய பேச்சுக்கள் முழு வெற்றியைத் தாராததால், இவ்வாண்டு காந்தியடிகள் அதனைத் தொடர்ந்து ஜின்னாவுடன் பல நாட்கள் பேசினார்.

ஆனால், காந்தியடிகளாலும் எத்தகைய முடிவுக்கும் வர முடியவில்லை. இதுமுற்றிலும் வருந்தத்தக்கது என்பதில் ஐயமில்லை. ஏனெனில், இதனாலேற்பட்ட பிரிவினை ஒரே இந்தியா கனவாளர்களின் கனவைக் குலைத்து விட்டது; அது மட்டுமன்றிப் பிரிந்துவிட்ட நாடுகளிலும் இப்பிரிவினை முழு நட்பை உண்டுபண்ண முடியவில்லை. ஜின்னா முஸ்லிம் வெறியர்களுள் ஒருவர் என்று எவரும் கூற முடியாது. அதுபோலவே, காந்தியடிகளை இந்து மத வெறியர் என்றும் எவரும் கூறமாட்டார். உண்மையில் இருவருமே பின்னாட்களில் தத்தம் மதத்தின் வெறிக்கு ஆளாய் உயிர் நீத்தனர் என்பதையும் நாம் உணர வேண்டும். அத்தகைய இரு சமூகங்களின் அறிவுடைத் தலைவர்கள் ஒத்துவர முடியவில்லையென்றால், அந்நிலை தொலைநோக்குடைய எவரையும் சிந்தனையிலாழ்த்தாமலிருக்க முடியாது.

ஜூலை 26ல் “இப்போதாவது விடுதலை உறுதி தந்தால், இப்போதே அறப்போராட்ட முறையைக் கைவிடும்படி பேரவைக்கு நான் பரிந்துரைக்க இணங்குகிறேன்”, என்று காந்தியடிகள் ஆட்சி முதல்வருக்கு எழுதினார். இதற்கு எதிரொலியாக வழக்கமான மறுப்புரையே கிட்டிற்று. ஆகஸ்டுப் புரட்சியில் கலந்து பின் தலைமறைவாய் இருக்கும் பலரைக் கூடக் காந்தியடிகளின் தூய அன்பழைப்பு ஆட்சியாளர் வாளுக்கு முன் வந்து கழுத்தைக் குனிந்து கொடுக்கும்படி தூண்டியது. ஆனால், அரசியல் முறைகளிலே வல்லுநரான ஆங்கில ஆட்சியாளரை ஒழுக்கமும் ஆன்மிக சத்தியும் தீண்டவில்லை. ஏகாதிபத்தியத்தை