(236)
அப்பாத்துரையம் - 12
அணைப்பவரைத் தவிர, மற்ற அனைவரையும் அவர்கள் ஒரே படியில் வைத்து எதிரிகளாகக் கருதினார்கள்.
1945-ஆம் ஆண்டில் காந்தியடிகள் கைவிட்ட இந்து- முஸ்லிம் சமரஸப் பேச்சுக்களைப் பேரவையின் சிறந்த வழக்கறிஞரான புலாபாய் தேசாயும் முஸ்லிம் சங்கத்தின் தலைவரான நவாபு ஜாதா லியாகத் அலிகானும் மீண்டும் தொடங்கினர். இதில் ஏற்படுவதாகத் தோற்றிய சிறிதளவு மின்னல் வெற்றி, பின்பு கானல் நீராக மாறிற்று.
அவ்வாண்டு ஏப்ரல் 3-ஆந் தேதி ஆகஸ்டுக் கலவர வழக்கில் எதிரிகளுக்குத் தூக்குத் தண்டனையை மாற்றித் தரும்படி கோரி நாடெங்கும் கிளர்ச்சிகள் நடத்தப்பட்டன.
ஏப்ரல் 7-ஆம் தேதி சான்பிரான்ஸிஸ்கோவில் நடைபெற்ற உலக நாடுகள் சபையின் கல்வி அறிவியல் பண்பாட்டுக் கழக மாநாட்டுக்கு' இந்தியா ஸர். ஏ. இராமசாமி முதலியார், ஸர்.பி.டி.வி. ஆசாரியார், ஸர். பிரோஸ்கான் தூன் ஆகியவர்களைப் பிரதிநிதிகளாக அனுப்பிற்று.
வேவல் பேச்சுக்கள்
1945, ஜூன் மாதத்தில் செயற்குழு உறுப்பினர்கள் விடுதலையானார்கள். அம்மாத நடுவில் வேவல் பேச்சுகள் தொடங்கின. செயலவையை விரிவுபடுத்தும் 1940-ஆம் ஆண்டு முயற்சியில் அவர் மீண்டும் ஈடுபட்டுத் தலைவர்களுடன் பேசினார். ஆனால், இத்தடவை “செயலவை இடைக்கால அமைச்சவையாகவே இயங்கும்”, என்பதும், “அதுவே முழு விடுதலைக்குரிய அரசியல் அமைப்பு மன்றத்தைக் கூட்டும்.” என்பதும் ஒத்துக்கொள்ளப்பட்டன. வேவல் பெருமகனார் கூட்டாகவும் தனித்தனியாகவும் பேரவைத் தலைவர்களுடனும் முஸ்லிம் சங்கத் தலைவர்களுடனும் சிம்லாவில் சந்தித்துப் பேசினார். இப்பேச்சுக்களே வேவல் பேச்சுகள் என்றும் சிம்லாப் பேச்சுகள் என்றும் வழங்கின. கிரிப்ஸ் திட்டத்தின் பின் இழந்த நம்பிக்கையை நாடு மீண்டும் பெற்றது போலத் தோன்றிற்று. ஆனால் நீடித்த பேச்சுகளினிடையே பல தடவை நம்பிக்கை ஒளியும், அவநம்பிக்கை முகில் திரையும் மாறிமாறித் தென்பட்ட