இந்திய மக்கள் விடுதலை இயக்க வரலாறு
(237
பின், மீண்டும் பிரிட்டிஷாரின் பழைய நிலையிலேயே யாவும் வந்து விடிந்தன.
ஜூன் 24-ஆந் தேதி வரை பேச்சுக்கள் நடைபெற்றன. பேச்சுகளின் முரிவுக்கு ஜின்னாவின் பிடிவாதமே காரணம் என்று மெளலானா ஆஸாது கருதினார். ஆனால், ஜின்னாவோ, ‘முஸ்லிம்களின் பிரதிநிதியாக முஸ்லிம் சங்கத்தின் உரிமையைப் பேரவை மதியாததுதான் காரணம்.' என்று கூறினார். உண்மைக் காரணத்தை அறிவது கடினமன்று, இந்தியர் ஒன்றுபட்டுக் கோருவதைக் கொடுப்பதாகவே பிரிட்டிஷார் இன்றும் கூறினர். ஒன்றுபடுத்தும் பொறுப்பை மூன்றாவது கட்சியினர், அதுவும் ஆளும் கட்சியினர், சரிவரக் கவனிப்பர் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?
1945ல் மேற்கு அரங்கப் போர் முடிவுற்றது. பிரிட்டிஷ் மன்றத்துக்கு நடைபெற்ற தேர்தலில் தொழிற்கட்சி வெற்றிபெற்றது. விரைவில் அமெரிக்கர் அணுகுண்டு வீசியது காரணமாக நீடித்துக்கொண்டு வந்த கீழ்த்திசைப் போரும் முடிவுற்றது.
ஜப்பான் சரணாகதியடைந்தது. அதற்கு முன்பே
ஜப்பானியர் ஒத்துழைப்பு இல்லாமையால், சுபாஷ் போஸ் தலைமையில் போராடிய இந்திய தேசியப்படையும் சரணடைந்தது. அவ்வீரர் தாம் விடுதலைப் போரின் இறுதியில் பிடிக்க எண்ணிய தில்லிச் செங்கோட்டையிலேயே இப்போது சிறைப்பட்டனர். ஆனால், அவர்கள் உடல் கட்டுண்டா டாலும், அவர்கள் உள்ளத்தில் துடித்த விடுதலை ஆர்வத் தீ, நாடெங்கும் புதிய விடுதலை வெறியை ஊட்டிற்று. தோல்வியில் வெற்றி கண்ட அவ்வீரர்களின் போர்க்குரலான 'வாழ்க இந்தியா!' (ஜெய்ஹிந்த்) என்ற முழக்கம் இந்திய மக்களின் உயிர்க் குரலாயிற்று.
இந்திய விடுதலைப் படை
1941இல் இந்தியாவை விட்டு ஜெர்மனி சென்ற விடுதலைச்சிங்க ஏறாகிய சுபாஷ் போஸ், மேல் திசை நாடுகளெங்கம் சிறைப்பட்ட இந்திய வீரரைத் திரட்டி விடுதலைப்படையை அமைத்தார். கிழக்கே பாங்காக்கில்