பக்கம்:அப்பாத்துரையம் 12.pdf/259

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(238

அப்பாத்துரையம் - 12

இத்தகைய படை ஒன்றை ராஷ்பிகாரி போஸ் 1942, ஜூன்,15-ஆந் தேதி அமைத்திருந்தார். ஆனால், ஜப்பானியர் அவரையோ, அவர் ஜப்பானியரையோ, மதிக்க முடியாமல் இருந்து வந்தது. இந்நிலையில் விடுதலைப் படை வீரர் இந்தியாவின் வீரத் திருவுருவாகிய தலைவர் பெருந்தகை போஸை அழைத்தனர்.

அச்சு நாடுகளின் கருவியாகச் செயலாற்றாமல், அவர்களின் மதிப்பையும் அன்பையும் ஒருங்கே பெற்ற போஸ், நேச அரசுகளின் கடல் முற்றுகையிடையே துணிந்து சிங்கப்பூர் வந்து தலைமை ஏற்றார். அவர் தேசிய ஆர்வம், விடுதலை ஆர்வப் பொறிபறக்கும் அவர் பேச்சுகள், வீறார்ந்த அவர் செயல் திறம் ஆகியவை படைவீரருக்கு மட்டுமன்றித் தென்கிழக்காசியாவி லுள்ள பொது மக்களுக்கும் போரார்வம் ஊட்டிற்று. அவர் இந்திய விடுதலை அரசும் படையும் பொருளகமும் அரசியலரங்கங்களும் நிறைவுற அமைத்துப் பிரிட்டன்மீது போர் தொடுத்தார்.

விடுதலை இந்தியப் படையின் இ.தே. ரா.' அதாவது இந்திய தேசிய ராணுவத் தலைமையை போஸ் 1943, ஆகஸ்டு, 25ல் ஏற்றார். அத்துடன் 'ஜான்ஸி அரசி படை' என்று மாநிலப் பெரும் புயலின் வீரமங்கை ஜான்ஸி அரசி இலட்சுமிபாய் பெயரால் பெண்கள் படை ஒன்று திரட்டி, அதற்கு டாக்டராயிருந்த இலட்சுமியையே தலைவராக்கினார். சிறுவரிடையே ஆர்வமூட்டச் சிறுவர் படை ஒன்றும் அமைக்கப்பட்டிருந்தது. இவற்றுடன் 1943, அக்டோபர் 21ல் விடுதலை இந்திய அரசு அமைக்கப் பட்டது. அதை மதித்து ஜப்பான் அவ்வாண்டு இறுதியில் அதற்கு நில ஆட்சிக் கூறாக அந்தமான், நிக்கோபார்த் தீவுகளை அளித்தது. காப்டன் காந்திமதி நாதன் தலைமையில் அவற்றின் ஆட்சி ஒழுங்கு படுத்தப்பட்டது.

1944, ஜனவரி, 4ல் விடுதலை இந்தியப் படைகள் இந்திய எல்லையில் அரக்கான் பகுதியில் போர் தொடங்கிப் பெருவெற்றிகள் கண்டன. பிப்ரவரி, 4ல் இந்திய மண்ணில் முதல் முதலாகப் பேரவைக் கொடி விடுதலைக் கொடியாக விடுதலை பெற்ற மண்ணில் பறக்க விடப்பட்டது. அவ்வாண்டிலேயே போர் இம்பால் முனைக்கு மாறி, தாமு, உக்ருல், விஷ்ணுபூர் என்னும்