பக்கம்:அப்பாத்துரையம் 12.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




1. நம் குறிக்கோள்

காலை வண்ணம்

இந்திய மாநிலத்தின் புகழ்வானில் விடுதலை ஒளி வீசுகின்றது. அதனிடையே புதிய குடியரசு விடிவெள்ளியாகச் சுடரிடுகின்றது.நிழற் படலங்கள் இன்னம் அலையாடிக்கொண்டு தான் இருக்கின்றன. ஆயினும், எழுஞாயிற்றின் செவ்வொளி விரைந்து செவ்வொளியாய், பாலொளியாய், பகலொளியாய்ப் பரவும் என்பதில் ஐயமில்லை.

விழுஞாயிற்றின் செந்நிற வண்ணங் கண்டு கவிஞர் கனவு காண்பதுண்டு பாரத தேசம் எனப் பேர் பெற்றோங்கும் நம் மாநிலத்தின் பண்டைப் புகழ் இது போன்றது. அக்கவர்ச்சியில் நாம் ஈடுபடுவது இயல்பு. அது நம் வருங்கால வளர்ச்சியில் நமக்கு ஊக்கம் தரும் என்பதிலும் தடையில்லை. ஆனாலும், மாலை வண்ணத்தின் அழகு; ஒளியை இருள் விழுங்கும் அழகு; அதில் பின்னோக்கித்தான் நாம் ஒளியைக் காண முடியும்; முன்னோக்கி காண முடியாது. விடுதலை எழுச்சியின் அழகு இது போன்றதன்று. அது காலை வண்ணம் போன்றது. அதில் நாம் பின்னோக்கி இருள் கண்டு, முன்னோக்கி ஒளியை வரவேற்கின்றோம். இருள் படிப்படியாக ஒளியாக வளர்கிறது. ஒளி படிப்படியாகப் பேரொளியாக வளம் பெறுகிறது.

காலை வண்ணம் தருவது இன்பம் மட்டுமன்று; அது இன்பத்துடன் ஆர்வத்தையும், ஊக்கத்தையும் கலக்கின்றது. அதன் மூலம் நமக்குக் களிப்பு ஏற்படுகின்றது. காலை வண்ணம், அழகுக் காட்சி மட்டுமன்று; ஊன்றிக் கவனித்தால், அஃது உயிரினங்களின் வாழ்விலும் மக்கள் வாழ்விலும் மலர்ச்சியும் வளர்ச்சியும் உண்டு பண்ணுகிறது என்பதை உணரலாம்.

கதிரவனொளி கண்டதும் போதுகள் இதழ் அவிழ்கின்றன; மலர்கள் மணம் கமழ்கின்றன. அது மட்டுமன்றி, மலரிலுள்ள