பக்கம்:அப்பாத்துரையம் 12.pdf/260

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இந்திய மக்கள் விடுதலை இயக்க வரலாறு

239

இடங்கள் பிடிக்கப்பட்டன. இம்பாலும் எளிதில் விழ இருந்தது. அதற்குள் உலகப் போரின் நிலையில் மாற்றம் ஏற்பட்டது. பிரிட்டனின் முழுப் பலமும் படிப்படியாகக் கிழக்குப் போர் முனைக்குக் கொண்டு வரப்பட்டது. அப்போதும் விடுதலை இந்தியப்படைவீரமாகப் போர் செய்து அங்குலம் அங்குலமாகப் பின்வாங்கிற்று.இறுதியில் மிகுந்த இன்னல்களுக்கு ஆளாய் அது

சரணடைய வேண்டியதாயிற்று.

வெற்றி நாட்களில் 15,000 சதுரக் கல் பரப்புடைய நிலப்பகுதி, விடுதலை இந்தியப் படையின் கையில் இருந்தது.

இ.தே.ரா. இயக்கம்

1945, ஏப்ரலில் செங்கோட்டையில் சிறைப்பட்ட இந்திய தேசியப் படை வீரரின் வழக்கில், தேசத்தின் ஒப்பற்ற பெருந்தலைவர்களே முன்வந்து நின்று வாதாடினார்கள். அவர்கள் விடுதலையை நாடெங்கும் நாட்டு விடுதலைக் கிளர்ச்சியின் போர்க்குரலாயிற்று. தேசத்தின் குரல் பிரிட்டிஷ் ஆட்சியின் பிடியிலுள்ள நீதி மன்றங்களில் நீதியை நிலை நாட்டிற்று. படை வீரர்களும் அவர்களின் ஒப்பற்ற தலைவர்களான ஷா நவாஸ்கான், ஷேகல், தில்லான் என்பவர்களும் விடுதலை பெற்றார்கள். நாடு முழுவதும் இவ்வெற்றியைக் கொண்டாடிற்று.

1908 முதல் 1945 வரை தேசத்தின் போர்க்குரல், 'அன்னைக்கு வணக்கம்' (வந்தே மாதரம்) என்ற பங்கிம் சந்திரரின் பழம்பாடலாயிருந்தது. இப்போது அதனூடே ஓடும் உயிராக 'வெல்க இந்தியா!' (ஜெய் ஹிந்த்) என்ற பண் உலவிற்று. அது முன் என்றுமில்லாத அளவில் புதிய ஒற்றுமைப் பண்ணையே எங்கும் வளர்த்தது. பம்பாய் விமானப்படை வேலை நிறுத்தங்கள் இப்போது நிறவேறுபாட்டை எதிர்த்த தேசிய எதிர்ப்புக்காளாகி, படைத்துறை கடந்து, பொதுமக்கள் ஆதரவு பெற்ற இயக்கங்களாயின. அது மட்டுமன்றிப் பொதுமக்களிடையே வளர்ந்த ஒற்றுமை இப்போது ஒரு புதிய சூழ்நிலையை உண்டு பண்ணிற்று. இ.தே. ரா. இயக்கம் கட்சி வேற்றுமை கடந்த முழுத் தேசிய உருவில் காட்சியளித்தது. கிளர்ச்சியில் கலந்து கொண்டவர்களிடையே இப்போது அதன் புதிய சின்னங்களைக்