240 ||-
அப்பாத்துரையம் - 12
காண முடிந்தது. அவர்கள் பேரவையின் விடுதலைக் கொடி, முஸ்லிம் சங்கக்கொடி, தென்னாட்டின் இந்தி எதிர்ப்பாளர் கொடி ஆகிய எல்லா இந்தியக் கொடிகளையும் ஏந்தி, இந்தியா முன் என்றும் கண்டிராத புதியதொரு கண்கொள்ளா இந்திய ஒற்றுமைக் காட்சியை மக்களுக்குத் தந்தனர்.
பிரிட்டிஷ் அமைச்சவைத் தூதுக்குழு
1945, செப்டெம்பரில் இந்தியாவின் சட்டசபைகளுக்குத் தேர்தல்கள் நடந்தன. காந்தியடிகளின் புகழ்ப் பெயருடன் தலைவர் பெருந்தகை போஸின் பெயரும் இந்திய விடுதலைப் படையின் பெயரும் தேர்தல் குரல்களாயிருந்து பேரவைக்கு முன்னிலும் பெருவெற்றி தந்தன. பழைய மாநிலச் சட்டசபையில் பேரவைக்கு இருந்த 36 இடங்கள் இப்போது 55 ஆயின. 1946 ஜனவரியில் மாகாணங்களின் சட்டசபைகளுக்கு ஏற்பட்ட தேர்தலிலும் இதே முன்னேற்றத்தைக் காண்கிறோம். முந்திய தேர்தலில் பேரவைக்கு மொத்தம் 701 இடங்கள் கிடைத்தன. இப்போது அத்தொகை 980 ஆயிற்று. ஒடுக்கப்பட்டவர்களுக்கு முன் தனித்தொகுதியில் கிடைத்ததைவிட மிகுதியான இடங்கள் உரிமையாயின. அவை பேரவைக்கு ஒடுக்கப்பட்ட மக்கள் தந்த பேராதரவையும் காட்டின.
மேலும், இத்தடவை தேர்தலின் பின் தொடக்கத்திலேயே 8 மாகாணங்களில் பேரவை ஆட்சி ஏற்பட்டது.முந்திய தேர்தலில் முதன்முதல் பேரவை ஆட்சி 6 மாகாணங்களிலும் பிற்பட்டே இன்னும் 2 மாகாணங்களிலும் பரவிற்று. இதிலிருந்து பேரவைக்கு முன்னிலும் மக்களாதரவு வளர்ந்திருந்தது என்பது தெரிய வருகிறது.
தவிர, முஸ்லிம் பெரும்பான்மை முஸ்லிம் மாகாணங்களில் கூடப் பேரவைக்கே பேராதரவு ஏற்பட்டிருந்தது. மிகப் பெரும்பான்மை முஸ்லிம் மாகாணமான எல்லைப்புறத்தில் இப்போது தொடக்கத்திலேயே பேரவை ஆட்சி ஏற்பட்டது. முஸ்லிம் பெரும்பான்மையுடைய பஞ்சாபில் பேரவையுடன் சேர்ந்த கூட்டு அமைச்சவையே ஏற்பட்டது.பேரவைக்குட்படாத மாகாணங்கள் ரண்டே, அவை சிந்து, அஸ்ஸாம் ஆ ஆகியவைகளே. இங்கே கூட முஸ்லிம் சங்கம் ஐரோப்பியர்