பக்கம்:அப்பாத்துரையம் 12.pdf/262

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இந்திய மக்கள் விடுதலை இயக்க வரலாறு

241

உதவியுடன் தான் கூட்டு அமைச்சவைகள் மட்டும் நிறுவ முடிந்தது.

1946, பிப்ரவரியில் பிரிட்டனின் புதிய அரசியல் முற்றிலும் புதிய அடிப்படையில் இந்தியாவுடன் சமரஸ நட்புகொள்ளத் துணிந்தது. இந்நோக்கத்துடன் பிரிட்டிஷ் அரசியலார் பிரிட்டிஷ் மன்றத்தின் எல்லாக் கட்சியினரும் அடங்கிய ஒரு மன்றத் தூதுக் குழுவை இந்தியாவுக்கு அனுப்பினர். இதனையடுத்து, தனையடுத்து, பிரிட்டிஷ் அமைச்சர் குழுவிலிருந்து மூவரையே இந்தியருடனும் இந்தியத் தலைவருடனும் பேசி ஒரு முடிவுகாண முனையும்படிபிரிட்டிஷ் அரசியலார் அனுப்பினர். அதுபற்றி, பிப்ரவரி 17ல் பிரிட்டனிலிருந்து இந்தியா அமைச்சர் பெதிக் லாரென்ஸ் அறிவித்தார். அதே தேதியில் இந்திய ஆட்சி முதல்வரும் அது பற்றிய விளக்க அறிவுப்புத் தந்தார். மார்ச்சு 15ல் பிரிட்டிஷ் முதலமைச்சர் கிளெமெண்ட் ஆட்லி பிரிட்டிஷ் அரசியலின் நோக்கம் பற்றி பிரிட்டிஷ் அரசியல் மன்றத்தில் விளக்க உரை பகர்ந்தார். மார்ச்சு 23ல் அமைச்சவைத் தூதுக்குழு இந்தியா வந்து சேர்ந்தது. அதில் இந்தியா அமைச்சர் பெதிக் லாரென்ஸ் பிரிட்டிஷ் வாணிகச் சங்கத் தலைவர் ஸர் ஸ்டிராஃவோர்ட் கிரிப்ஸ், கடற்படை முதல்வர் ஏ.வி. அலெக்ஸாண்டர் என்னும் மூவர் உறுப்பினராயிருந்தனர்.

அமைச்சவைக்குழு

கூறுகளாவன:-

காண்டு வந்த திட்டத்தின்

(1) இந்தியா விரைவில் விடுதலை பெற வேண்டுமென்பதே பிரிட்டிஷ் அரசியலாரின் நோக்கம். ஆனால், இந்தியாவின் விடுதலை அரசியலை இந்தியர்தான் வகுத்துக்கொள்ள வேண்டும். பிரிட்டிஷ் அரசியலார் அதற்கான ஏற்பாடுகளை மட்டுமே செய்வார்.

(2) விடுதலை பெற்ற பின் பிரிட்டன் சேர்ந்திருப்பதும் பிரிந்திருப்பதும் இந்தியாவின் விருப்பத்தையே பொறுத்தது.

(3) பேரவை, முஸ்லிம்- சங்கம் ஆகியவற்றிடையே ஒற்றுமைகாண, பிரிட்டிஷார் செய்த முயற்சிகள் எவையும் பயன் தரவில்லை. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள வடமேற்கு எல்லையிலும் வடகிழக்கு எல்லையிலும் முஸ்லிம் தனி உரிமை