பக்கம்:அப்பாத்துரையம் 12.pdf/263

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அப்பாத்துரையம் - 12

242) ||- அரசு நிறுவ முஸ்லிம் சங்கம் உறுதிகொண்டுள்ளது. ஆனால், பாகிஸ்தான் வேண்டுமென்பதற்காகக் கூறும் வாதங்களெல்லாம் முஸ்லிம் அல்லாத பகுதிகளை அம்முஸ்லிம் பகுதிகளில் சேர்க்கக்கூடாது என்பதற்கும் பொருந்தும். முஸ்லிம் அல்லாதாரே பெரும்பான்மையாயுள்ள அஸ்ஸாமையும் பஞ்சாபின் சில பகுதிகளையும் வங்காளத்தின் சில பகுதிகளையும் பாகிஸ்தானில் சேர்ப்பது இவ்வகையில் நியாயமாகாது. அத்துடன் பஞ்சாபு பகுதிப்பிரிவினை சீக்கியர்களைப் பாதிப்பதாகவும் உள்ளது.

ாடு

(4) பிரிவினையாலும் மாகாணங்களைத் துண்ட வதாலுங்கூட வகுப்புப் பிரச்சினை தீர்ந்துவிடாது. அத்துடன் பிரிவினையால் போக்குவரத்து, தந்தி அஞ்சல் வாய்ப்பு,பாதுகாப்பு ஆகியவற்றுக்கு ஊறு ஏற்படும்; நாட்டு மன்னர் பகுதி வகையில் சிக்கல்கள் ஏற்படும்; வடகிழக்கு, வடமேற்குப் பகுதிகளிடையே போக்குவரவு இணைப்புக்கு வழி இல்லாதிருக்கும்; இரண்டு பகுதிகளும் எல்லைப்புறத்திலிருப்பதால், பாதுகாப்பு வகையில் மொத்த இந்தியாவைபிடப் பிரிவினைக்கு உட்பட்ட இந்தியா வலிமை குறைந்ததாயிருக்கும்.

(5) அரசியலமைப்பு மன்றம் கூடும்வரை, எல்லாக் கட்சிப் பிரதிநிதிகளும் அடங்கிய டைக்கால அரசு ஒன்று அமைக்கப்படும்.

இத்திட்டம் கட்சி எதிர்க்கட்சி அடிப்படையில் நாட்டின் நிலைமைகளை நன்கு விளக்கிற்று.

டைக்கால அரசு

பேரவைச் செயற்குழு, மே, 26ல் கூடி, இத்திட்டம் பற்றி ஆராய்ந்து, பல செய்திகளில் தெளிவுகள் கோரிற்று. முஸ்லிம் சங்கத் தலைவர் ஜின்னாவும் இதுபோலப் பல தடங்கல்களை எடுத்துக்காட்டி விளக்கம் கோரினார். அமைச்சவைத் தூதுக்குழுவின் நீண்டகாலத் திட்டத்தை ஏற்பதென்றும், குறுகிய காலத் திட்டமான இடைக்கால அரசுத் திட்டத்தை மறுப்பதென்றும் பேரவை தீர்மானம் செய்தது. முஸ்லிம் சங்கம் நீண்டகாலத் திட்டத்தையும் இடைக்காலத் திட்டத்தையும் ஒருங்கே ஏற்றது.