இந்திய மக்கள் விடுதலை இயக்க வரலாறு
243
நீண்டகாலத் திட்டத்தை இங்ஙனம் எல்லாக் கட்சிகளும் ஏற்றன. ஆகவே, அது செயல்முறைப்படுத்தப்பட்டது. எல்லா மாகாணங்களிலும் அரசியல் அமைப்பு மன்றத்துக்கான தேர்தல்கள் நடக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
ஜூலை6,7 இல் கூடிய பேரவைப் பெருங்குழு, இடைக்காலத் திட்டத்தையும் ஏற்பதென்று முடிவு செய்தது. மௌலானா ஆஸாது, ஸர்தார் வல்லபபாய் பட்டேல் முதலிய பெருந்தலைவர் அனைவரும் இதை வலியுறுத்தினர். திரு. ஜெயப்பிரகாஷ் நாராயணனும் வேறு இடசாரியினர் ஒரு சிலரும் மட்டுமே எதிர்த்தனர்.
வேவல் பெருமகனார், பண்டித ஜவஹர்லால் நேருவை அழைத்து, இடைக்கால அரசை அமைக்கும்படி கூறினார். முன் சென்னை ஆட்சி முதல்வரிடம் சென்னை முதல்வர் ராஜகோபாலாசாரியார் கோரியதுபோல, நேருவும் ஓர் உறுதி கூறினார். இடைக்கால அரசின் உறுப்பினர் ஒரு கூட்டுப் பொறுப்பு வாய்ந்த அமைச்சர் குழுவாய் இயங்க வேண்டு மென்பதே அவ்வுறுதி, ஆட்சி முதல்வர் இதை அளித்தபின், நேரு இடைக்கால அரசுக்கு இணக்கம் தெரிவித்து, அதற்கான அமைச்சர் பட்டியலைத் தந்தார். 1946, ஆகஸ்டில், அது ஏற்கப்பட்டது. இடைக்கால அரசு ஸெப்டெம்பர் 2ல் பதவி ஏற்றது.
இடைக்கால அரசில் பண்டித ஜவஹர்லால் நேரு, ஸர்தார் வல்லபபாய் பட்டடேல், டாக்டர் ராஜேந்திரப் பிரஸாது, திரு. ஆஸஃவ் அலி, திரு.ஸி.ராஜகோபாலாசாரியார், திரு. ஸரத் சந்திர போஸ், டாக்டர் ஜான் மத்தாய், சர்தார் பலதேவ் சிங்கு, ஸர் ஷஃவாத் அகம்மத் கான், திரு. ஜகஜீவன்ராம், திரு. சையத் அலி ஜஹீர், திரு. கூவர்ஜி ஹார்முஸ்ஜி பாபா ஆகியோர் பெற்றிருந்தார்.
ம்
பண்டித நேரு பதவி ஏற்றவுடன் வானொலியில் பேசுகையில் இவ்விடைக்கால அரசை முழுநிறை விடுதலைக்கான ஒரு படிக்கல் என்று குறிப்பிட்டார்.
இப்போது இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின் வரலாற்றிலேயே முதன்முதலாக நடுவரசிலும் மாகாண