244
அப்பாத்துரையம் - 12
அரசுகளிலும் பொறுப்பாட்சி ஏற்பட்டது. அத்துடன் மாகாணங்களில் பெரும்பாலானவற்றிலும் நடுவரசிலும் இப்போது பேரவையே பெரும்பான்மை இடம் பெற்று ஆட்சியை மேற்கொண்டிருந்தது.
எல்லா
அமைச்சவைத் தூதுக்குழுவின் நீண்ட காலத்திட்டப்படி 1946 ஜூலையில் அரசியல் அமைப்பு மன்றத்திற்கான தேர்தல்கள் நடைபெற்றன.பேரவை இத்தடவை பேரவைக் கட்சியாக மட்டும் செயலாற்றாமல், தன் உண்மை இயல்புக்கேற்பத் தேசிய அவையாகவே செயலாற்றத் துணிந்தது. அது வகுப்பினரிடமிருந்தும் திறமையுள்ள பிரதிநிதிகளைத் தேர்தலுக்கு நிறுத்திற்று. பேரவைக்கட்சிக்குட்படாத பிற கட்சியினர், கோட்பாட்டினர்களிடையே கூடத் தலைசிறந்த பலரை அது சேர்த்துக் கொண்டிருந்தது. பேரவைக்குப் பெரு வெற்றி கிடைத்தது. மொத்தம் 296பேர் அடங்கிய மன்றத்தில் 212 பேரின் ஆதரவு அதற்கு இருந்தது.
இத்தேர்தலில் பொதுத் தொகுதிகளில் பல முஸ்லிம்கள் பேரவையால் நிறுத்தப்பட்டு வெற்றி பெற்றிருந்தார்கள். ஆயினும், முஸ்லிம் தொகுதிகள் 78ல் 73இடங்கள் முஸ்லிம் சங்கத்துக்கே கிடைத்தன.
முஸ்லிம் சங்கத்தின் போர்க் குரல்
முஸ்லிம் சங்கத் தலைவர் ஜின்னா, பேரவையின் பெருமித வெற்றியைக் கண்டும் பண்டித ஜவஹரின் தலைமையில் டைக்கால அரசு அமைந்தது கண்டும் சீற்றமுற்றார். ஜூலை 2- ஆந் தேதியே முஸ்லிம் சங்கம் பிரிட்டிஷார்மீது நேரடி நடவடிக்கை தொடங்குவதாகத் தீர்மானம் செய்தது. ஆகஸ்டு 16- ஆந் தேதியை நேரடி நடவடிக்கை நாளாகக் கொண்டாடும்படி ஜின்னா கட்டளையிட்டார்.
பிரிவினைக்கு முன்னும் பின்னும் இந்தியாவில் இந்துக்கள் முஸ்லிம்கள் இரு சாராரிடையிலும் பேரளவான குருதியாறு களை ஓடவிட்ட தீர்மானம் இதுவே.நாளடைவில் பேரவையின் தனிப் பெருந்தலைவரான காந்தியடிகளும், முஸ்லிம் சங்கத்தின் தனிப்பெருந்தலைவரான ஜின்னாவும் ஆகிய
ருவருமே