பக்கம்:அப்பாத்துரையம் 12.pdf/266

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இந்திய மக்கள் விடுதலை இயக்க வரலாறு

(245

அக்குருதியாற்றில் அம்மதவெறியினாலேயே அடித்துச் செல்லப்பட்டனர் என்பது கூர்ந்து கவனிக்கத்தக்கது.

சிந்துவிலும் வங்கத்திலும் முஸ்லிம் சங்கச்சார்பான அமைச்சவைகள் இருந்தன. ஆயினும், வங்கத்திலேயே மாகாண ஆட்சி முதல்வர் ஆகஸ்டு 16-ஆந் தேதியை விடுமுறை நாளாகக் கொண்டாட முஸ்லிம் சங்க ஆட்சியாளருக்கு இணக்கம் அளித்தார். அங்கே முஸ்லிம் ஊர்வலங்களும், கொண்டாட்டங் களும் நடத்தப்பட்டன. முஸ்லிம் மதவெறி அவிழ்த்துவிடப் பட்டது. அது கல்கத்தாவை அமர்க்களமாக்கிற்று. அன்று ஒரு நாள் கலவரத்தில் இறந்தவர் 6000 பேர் என்றும், காயமடைந்தவர் 15,000 பேர் என்றும், பொருள் இழப்பு 5 கோடி ரூபாய் என்றும் கூறப்படுகிறது.

இடைக்கால அரசு ஏற்பட்ட அன்று காந்தியடிகள் அகமகிழ்வுற்றார் அன்று நள்ளிரவு எல்லாரும் உறங்கிக் கொண்டிருக்கும் நேரத்திற்கூட அவர் எழுந்து உட்கார்ந்து, பண்டித ஜவஹருக்குத் தம் மகிழ்ச்சியையும் பாராட்டையும் அறிவுரையுடன் கலந்து கடித உருவில் எழுதினார். ஆனால், கல்கத்தா நிகழ்ச்சி அவர் மனத்தைப் புண்படுத்திற்று.

முஸ்லிம் சங்கத்தின் நேரடி நடவடிக்கைத் தீர்மானமும், அதன் பின்விளைவாக எழுந்த கல்கத்தா களரியும் பேரவைத் தலைவர்களைக் கலங்க வைத்தன. ஆனால், ஜின்னாவும் முஸ்லிம் சங்கமும் நேரடி நடவடிக்கையின் மூலமே முஸ்லிம் உலகு தன் முடிப்புரிமை பெற முடியும் என்று குறிப்பிட்டனர். எனினும், மாநில ஆட்சி முதல்வர் இரு கட்சித் தலைவர்களையும் ஒருவாறு இணங்க வைத்து, முஸ்லிம் சங்கத்தையும் அக்டோபர் 15-ஆந் தேதி இடைக்கால அரசில் சேரும்படி செய்தார். இது சமயம் இந்திய முஸ்லிம்கள் வகையில் முஸ்லிம் சங்கமே பிரதிநிதித்துவம் உடையதென்பதை ஒத்துக்கொள்ளும்படி பேரவை வற்புறுத்தப் பட்டது. பேரவை இதற்கு இணக்கமளித்தது. ஆனால், பேரவை கோரியபடி இடைக்கால அரசின் கூட்டுப் பொறுப்பையும் பண்டித நேருவின் தலைமைப் பொறுப்பையும் முஸ்லிம் சங்கம் ஏற்க மறுத்துவிட்டது.

முஸ்லிம் சங்கத்தின் சார்பில் இடைக்கால அரசில் இடம் பெற்றவர்கள் திரு.லியாகத் அலிகான், திரு. ஐ.ஐ. சந்திரிகர், திரு.