பக்கம்:அப்பாத்துரையம் 12.pdf/267

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




246 ||-

திரு.

அப்பாத்துரையம் - 12 அப்துர் ரப் நிஸ்தார், திரு. கஃஜ்னஃவர் அலிகான், ஜோகேந்திர நாத் மண்டல ஆகியவர்கள். இவர்களுள் திரு. ஜோகேந்திரநாத் மண்டல், டாக்டர் அம்பேத்காரின் ஒதுக்கப் பட்டவர் கழகத்தைச் சேர்ந்தவர். புதிய உறுப்பினர்களுக்கு இடமளிக்கும் முறையில் பழைய இடைக்கால அரசியலின் உறுப்பினரான திரு. சரத் சந்திர போஸ், ஸர் ஷஃவர்த் அகமதுகான், திரு. சையத் அலிஜஹீர் ஆகியவர்கள் விலகிக் கொண்டார்கள்.

இடைக்கால அரசில் முஸ்லிம் சங்கமும் பேரவையும் பிரிட்டிஷ் தூண்டுதலால் ஒருங்கே ஆட்சி செய்தாலும், இரு கட்சிகளுக்குமிடையே நல்லெண்ணம் வளரவில்லை. “இடைக் கால அரசுக்கு உள்ளேயும் புறம்பேயும் பாகிஸ்தானுக்காகவும் முஸ்லிம்களின் தன் முடிப்புரிமைக்காகவும் நாங்கள் போராடுவோம்!” என்று இச்சமயம் முஸ்லிம் சங்கத்தின் பிரதிநிதி ஒருவர் அமெரிக்காவில் குறிப்பிட்டிருந்தார். இதற்கேற்ப, இடைக்கால அமைச்சர்களிடையே பூசலும் போட்டிகளும் நிலவி வந்தன. வெளியேயும் கல்கத்தாவில் தொடங்கிய நேரடி நடிவடிக்கை நிகழ்ச்சிகள், கிழக்கு வங்கமுழுவதும் பரவின. சிறப்பாக நவகாளி வட்டத்தில் ஒரு நவகாளியே தன் கோர உருவம் காட்டிப் பயங்கர நடனமாடினளாள். பஞ்சாபுப் படுகொலைகளைவிட அவை நாட்டில் பேரதிர்ச்சியை உண்டு பண்ணின. முஸ்லிம் மதவெறி இதற்குள்ளாக இந்து எதிர் வெறியையும் கிளப்பிவிட்டது.பீகாரில் நவகாளிக்குப் பழிக்குப் பழிவாங்கும்படலம் தொடங்கிற்று.

ஆட்லியின் பிப்ரவரி 20-ஆந் தேதி அறிக்கை

கல்கத்தா நிகழ்ச்சியும், நவகாளி நிகழ்ச்சியும், பீகார் நிகழ்ச்சியும் இந்தியாவினால் எளிதில் மறக்க முடியாத இன்னல்கள். விடுதலை வரலாற்றில் எளிதில் கழுவி அகற்றிவிட முடியாத கறைகள் அவை. ஆனால், அப்பெருந்தீமைகளினாலும் ஒரு நன்மை ஏற்பட்டது: இந்திய அரசியல் நெருக்கடியை இப்படியே வளரவிடுவது பேராபத்து என்பதை பிரிட்டன் நன்கு அறிந்துகொண்டது. இதன் பயனாக, பிரிட்டிஷ் முதல்வர் அட்லி, 1947 பிப்ரவரி மாதம் 20-ஆந் தேதி இந்திய விடுதலை பற்றிய