248
அப்பாத்துரையம் - 12
இப்பரபரப்புக்கிடையே மார்ச்சு 22ல் வேவல் பெருமகனார் திருப்பியழைக்கப்பட்டார். மவுண்ட் பாட்டன் கோமகனார் புதிய ஆட்சி முதல்வராய் அமர்த்தப்பட்டார். அவரே விடுதலை வழங்கிய ஆட்சி முதல்வராதலால், பிரிட்டிஷ் ஆட்சி முதல்வருள் கடைசியானவராய் அமைந்தார்.
ஆட்சி முதல்வரின் தூண்டுதலால் காந்தியடிகளும் ஜின்னாவும் ஒருங்கே இணைந்து, முஸ்லிம் ஒற்றுமையையும் அமைதியையும் கோரி ஏப்ரல் 15ல் கூட்டு வேண்டுகோள் விடுத்தனர். தனாலும் வகுப்புக் கலவரங்கள் சிறிதும் தணியவில்லை. அதன்மீது புதிய அடிப்படையில் மீண்டும் பேச்சு வாதங்கள் தொடங்கும்படி மவுண்ட்பாட்டன் பெருமகனார் மே, 2-ஆந் தேதி தம் சார்பில் படைத்தலைவர் 'இஸ்மே'யைத் தாய் நாட்டுக்கு அனுப்பினார். விரைவில் அவரும் 17-ஆந் தேதி பிரிட்டன் சென்றார். பிரிட்டிஷ் தலைவர்களிடம் அவர் நிலைமையை எடுத்துரைத்ததன் பேரில் அதிகாரமற்ற நாள் வரையில், 1948 ஜூன் என்ற முன்னைய திட்டத்தை மாற்றி, 1947 ஆகஸ்டு 15க்குள்ளேயே அதை விரைவுபடுத்திவிடுவதென்பது அறிவிக்கப்பட்டது. அத்துடன் இந்தியாவைப் பாகிஸ்தான், ஏனை இந்தியப் பகுதி என்று எப்படியும் பிரித்தே தரவும் பிரிட்டிஷார் துணிவுகொண்டனர்.
காந்தியடிகள் இறுதி வரை எப்படியும் பிரிவினையை ஏற்க மனம் ஒப்பவில்லை. பிரிவினை செய்வது என்ற முடிவை எதிர்த்துத் தாய் மொழியையே உயிராகக் கொண்டு வங்க நாட்டையாவது ஒன்றுபடுத்தி நிறுத்த அதன் முதல்வர் ஃவஃலுல் ஹக்குடன் அவர் ஒத்துழைக்க முயன்றார். ஆனால், எதுவும் பயன்படவில்லை. அரசியல் நோக்கில் நின்று பார்த்த பேரவைத் தலைவர்களுக்குப் பிரிவினை வெள்ளம் அணைபோட முடியாத அளவு பெருகிவிட்டது என்பது புலனாயிற்று. ஆகவே, அவர்கள் வேண்டா வெறுப்பாகப் பிரிவினையை ஒத்துக் கொண்டார்கள். ஆனால், மத அடிப்படையில் பெரும்பான்மை முஸ்லிம்கள் வாழும் பகுதிகளை பிரிக்கப்பட வேண்டும் என்ற கொள்கை யிலேயே நின்று, அவர்கள் வங்கத்திலும் பஞ்சாபிலும் இந்துக்கள் பெரும்பான்மையாய் உள்ள பகுதியின் உரிமையையும்,