6
அப்பாத்துரையம் - 12
சை
பொன்துகளையும் தேனையும் உண்டு வண்டுகள் பாடுகின்றன. இதனால், வண்டுகளின் வாழ்வும் வளம் பெறுகிறது. அதே சமயம், மலர்களும் வளமெய்துகின்றன. வானொளி கண்டு பறவைகள் சிறகலைத்துக் கலகலக்கின்றன. அவை தம் குஞ்சு களுக்கு இரையளித்துத் தாமும் இரைதேடப் புறப்படுகின்றன. சோர்ந்து துயிலும் தொழிலாளியை இளஞாயிற்றின் ஒளிக்கரங்களும் அவன் இன்பக் குழவியின் மென்கரங்களும் ஒருங்கே தட்டியெழுப்புகின்றன. இயற்கையன்னையின் ஒரு மதிமுக மென்சாயல், இதைப் பலகனி வழியாகக் கண்டு புன்னகை பூக்கின்றது. இக்காட்சி தொழிலாளியின் துயிலுடன் துயரையும் அகற்றி, அவனை அவன் நாள்வேலையில் ஊக்கும் என்பது உறுதி. நாள்தோறும் புலர்காலையின் அழகைக் காண்கிறோம்; கண்டு பழகிவிடுகிறோம். ஆண்டுதோறும் நாம் தமிழ்ப் பொங்கல் விழாக் கொண்டாடுகிறோம்; கொண்டாடிப் பழகிவிடுகிறோம். அவற்றின் முழு அழகை, முழு அருமையை, தமிழ்க் கவிஞர் நமக்குத் தீட்டிக் காட்டிய பின்பே நாம் நேர் முகமாக உணர்கிறோம். விடுதலை நாளையும் குடியரசு நாளையும் நாம் ஆண்டுதோறும் கொண்டாடத் தொடங்கி யிருக்கின்றோம். இவையும் விழாக்களுடன் விழாவாகப் பழகிவிடக்கூடும். இவற்றின் குறிக்கோளை- அருமை பெருமை களை - மறவாது பேணும் பொறுப்பு, பொதுவாக மாநில மக்களையும், சிறப்பாக இளைஞரையும் இள நங்கையரையுமே சாரும்.
அழகும் பயனும்
நாம்
அழகு எப்போதும் இனிது. ஆனால், பயன் அதனினும் பல மடங்கு இனிது. அழகிருந்தும் பயன்படா மலர்கள் உண்டு. அவை காட்டு மலர்கள். நீரோட்டமிருந்தும் பயன்படா ஆறுகள் உண்டு. அவை காட்டாறுகள்.நம் மாநில விடுதலையும் குடியரசும் நமக்கு இத்தகைய காட்டு மலராக, காட்டாறாக இருந்துவிடக்கூடாது. அழகுடன் பயனும் தரும் நாட்டு மலராக- நானிலத்தை வளப்படுத்தும் நாட்டாறாக அவை திகழ வேண்டும்.
விடுதலை நம் குறிக்கோள். அதற்காக நாம் நீண்ட நாள் போராடியிருக்கிறோம். குடியரசு நம் தொலை இலக்கு.அதனை