பக்கம்:அப்பாத்துரையம் 12.pdf/270

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இந்திய மக்கள் விடுதலை இயக்க வரலாறு

(249

இந்துக்களே பெரும்பான்மையாயுள்ள அஸ்ஸாம் மாகாணத்தின் உரிமையையும், முஸ்லிம்கள் பெரும்பான்மையாய் இருந்தும் தன் முடிபுரிமையையும் வற்புறுத்தினர். பிரிட்டிஷார்கூட இந்த நேர்மையை ஒத்துக்கொண்டனர்.

மவுண்ட்பாட்டன் திட்டம்: விடுதலை, ஆனால் பிரிவினை

அடங்கிய

இங்ஙனம் பேரவை கோரிய அகண்ட இந்தியக் கொள்கை நிறைவேறாமல் போயிற்று. அதே சமயம் முஸ்லிம் சங்கம் கோரிய முழுப் பஞ்சாபு, அஸ்ஸாம் ஆகியவைகள் பாகிஸ்தானும் நிறைவேறவில்லை. இரு சார்பினரிடையேயும் மவுண்ட்பாட்டன் விரைவுபடுத்தி வலியுறுத்திய முடிவுகள்

வருமாறு:-

1. பஞ்சாபு, வங்காளம் ஆகிய இரண்டின் சட்டசபை களிலும் இந்துக்கள் பெரும்பான்மையாயுள்ள மாவட்டப் பிரதிநிதிகள் ஒரு தனி இருக்கையாகவும், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள மாவட்டப் பிரதிநிதிகள் மற்றொரு தனி இருக்கையாகவும் கூட வேண்டும். இரண்டில் எது பிரிவினை கோரினாலும், மாகாணம் பிரிக்கப்படும்.

2. அஸ்ஸாம் மாகாணத்தில் ஸில்ஹட்டுப் பகுதி பெரும்பான்மை முஸ்லிம்கள் உள்ளது. அதில், ‘பாகிஸ்தானுடன் சேர்வதா, இந்தியாவுடன் சேர்வதா?' என்பது பற்றிப் பொதுமக்கள் மொழியுரிமைச் சீட்டு எடுக்கப்படும்.

3. வடமேற்கு எல்லைப்புற மாகாணத்திலும் பொதுமக்கள் மொழியுரிமைச் சீட்டு இதே வகையில் எடுக்கப்படும்.

பேரவையும் முஸ்லிம் சங்கமும் இப்போது அதிகார மாற்றத்தை எதிர்நோக்கி இத்திட்டங்களை ஏற்றன. பஞ்சாபும் வங்கமும் பிரிவினை கோரித் தீர்மானித்தன. ஸில்ஹட்டும் வடமேற்கெல்லைப் புறமும் பாகிஸ்தானில் சேரவேண்டும் என்றே தீர்மானித்தன.

வங்காளத்திலும் பஞ்சாபிலும் எல்லைகளை வரையறுக்க ஸர் ஸிரில் ராபர்ட்க்ளிஃவ் தலைமையிலேயே தனித்தனியாக இரண்டு எல்லை உறுதிக் குழுக்கள் நிறுவப்பட்டன. ஆட்சி