(250
அப்பாத்துரையம் - 12
நிலையங்கள், படைத்துறை, படைத்துறைப் போர்க்களங்கள், பொருளகம், கடன் நிலுவைகள் ஆகியவற்றை இரு புதிய நாடுகளுக்குமிடையில் பிரிவினை செய்ய ஒரு பிரிவினை மன்றமும், அதில் பத்துப் பிரிவினைக் குழுக்களும் நிறுவப்பட்டன. படைத்துறையில் சிறிது கூடுதல் குறைவாக இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே 82 1/2க்கு 17 1/2என்ற விகிதப்படி பிரிவினை நிகழ்த்தப்பட்டது.
இந்துக்கள் பெரும்பான்மை, முஸ்லிம்கள் பெரும்பான்மை என்ற அடிப்படையிலேயே பஞ்சாபு பிரிக்கப்பட்டது. ஆனால், இந்துக்களையும் முஸ்லிம்களையும்விடப் பஞ்சாபுக்கு உயிர் நிலையான வகுப்பியர் சீக்கியரே. பிரிவினையால் அவர்களே மிகவும் பாதிக்கப்பட்டார்கள். அவர்களில் 20 லட்சத்துக்கு மேற்பட்டவர் இந்தியப் பகுதியிலும், 17 லட்சத்துக்கு மேற்பட்டவர் பாகிஸ்தான் பகுதியிலுமாகப் பிரிவுற்றனர். அதே சமயம் அமிர்தசரசு போன்ற அவர்கள் சமயத் திருவிடங்கள் பெரும்பாலும் பாகிஸ்தான் பகுதியிலேயே இருந்தன. சீக்கியர்களில் பலர் இந்துக்களைப் போலப் பிரிவினையை எதிர்த்தவர்கள் ஆகவே, பிரிவினைப் பேச்சு எழுந்ததே. சீக்கியருக்கும் முஸ்லிம்களுக்குமிடையே புதிதாக மனக்கசப்பு ஏற்பட்டுக் கலவரம் தொடங்கிற்று. இதுவும் இந்து முஸ்லிம் கலவரமாகப் பெருகிற்று.பீதியடைந்த மக்கள், இருபுறமிருந்தும் மறுபுறம் நோக்கிக் குடிபெயரத் தொடங்கினார்கள். அவர்களிடையே தோன்றிய பூசல்கள் மீண்டும் பிரிவினைச் சமயத்திலேயே விடுதலையின் வெள்ளொளியைக் குருதிக் களரிகளால் கறைப்படுத்தின.
பிரிவினைக்கு முன்னும் பின்னும் பஞ்சாபில் பாகிஸ்தான் பகுதியிலிருந்தும் இந்தியாவிலிருந்தும் இரு நாடுகளின் எல்லை கடந்து குடிபெயர்ந்தவர்கள் தொகை கிட்டத்தட்ட ஒவ்வொரு பக்கத்திலும் 60 லட்சமாக மொத்தம் 1 கோடி 20 லட்சம் இருக்குமென்று மதிப்பிடப்படுகிறது. அவர்களுள் வழியிலே நடைபெற்ற இன்னல்களாலும் கைகலப்புகளாலும் இறந்தவர் தொகையும் 20 லட்சத்துக்கு மேற்பட்டதென்று கருதப்படுகிறது.