பக்கம்:அப்பாத்துரையம் 12.pdf/272

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இந்திய மக்கள் விடுதலை இயக்க வரலாறு

விடுதலை- மின்னொளி

251

1947 ஆகஸ்டு, 15-ஆந் தேதி இப்புயல்களிடையே இந்தியப் பேரவை நீண்டநாள் போராடிப் பெற்ற விடுதலை. மின்னொளி போல இந்திய வானில் ஒளி வீசிற்று. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் பொதுவான ஒரே ஆட்சி முதல்வரமர்த்துவது என்ற முடிவை முஸ்லிம் சங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை. மவுண்ட் பாட்டன் பெருமகனாரை விடுதலை இந்தியா தன் முதல் ஆட்சி முதல்வராக ஏற்றுக் கொண்டது. ஆனால், பாகிஸ்தான் தன் புதிய ஆட்சி முதல்வராக முஸ்லிம் சங்கத் தலைவர் ஜின்னாவையே அமர்த்திற்று. இந்தியாவில் இடைக்கால அரசியல் தலைவராயிருந்த பண்டித ஜவஹர்லால் நேருவே அதன் தொடக்க முதலமைச்சர் ஆனார். பாகிஸ்தானத்துக்கு ஜின்னாவே ஆட்சி முதல்வராக ஏற்படுத்தப் பட்டதனால், நவாபு ஜாதா லியாகத் அலிகான் முதல்வரானார்.

1947 ஆகஸ்டு நள்ளிரவுப் போதில் விடுதலை இந்தியாவின் பணிக்கான உறுதியை ஏற்றுப் பண்டித ஜவஹர்லால் நேரு மவுண்ட்பாட்டனிடமிருந்து அதிகார மாற்றத்தை ஏற்றார். இடைக்கால அரசில் பங்கு கொண்டிருந்த அமைச்சர்களுள் பாகிஸ்தான் சார்பாகப் பிரிந்தவர் போக, மற்றவர்களும் முறைப்படி உறுதி கூறிப் பதவி ஏற்றார்கள்.

அன்று வானொலி மூலம் பண்டித ஜவஹர்லாலும் மற்றத் தலைவர்களும் நாட்டுக்குப் புதிய இந்தியாவின் நற்செய்தியைத் தெரிவித்து, விடுதலை இந்தியாவுக்குப் பணியாற்றும் தங்கள் ஆர்வத்தைப் புலப்படுத்தினார்கள். தில்லியிலும் மாகாணத் தலைநகர்களிலும் தலைவர்களால் மக்கள் ஊர்வலங்கள் நடத்தப்பட்டு, விழாக்கள் கொண்டாடப்பட்டன. பேரூர்கள், சிற்றூர்கள் யாவும் தனித்தனி விழாக்கள் நடத்தித் தேசியப் பெருவிழாவில் பங்கு கொண்டன.

புதிய இந்தியா, பேரவை இதுகாறும் கொண்ட தேசியக் கொடியில் விடுதலைக்கு அறிகுறியாக ஒரு சிறிய மாற்றம் செய்தது. சிவப்பு, வெள்ளை, பச்சை ஆகிய முந்நிறப் பட்டைகளில் நடுப்பட்டையாகிய வெள்ளைப் பட்டையில் முன்பு பொறிக்கப்பட்டிருந்த இராட்டினம் இப்போது வரலாற்றுச்