இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
252
அப்பாத்துரையம் - 12
சிறப்புடைய அசோக சக்கரமாக மாற்றப்பட்டது. நாட்டின் பழங்கலைச் சின்னங்களுள் ஒன்றான கோபுரமும் அசோகர் காலச் சின்னமான மூன்று சிங்க உருவங்களும் புதிய அரசின் சின்னங்களாக ஏற்கப்பட்டன.
ய
விடுதலை இந்திய விழாவன்று இந்தியாவில் மட்டுமன்றி உலகின் எண்ணற்ற பல நாடுகளிலும் இந்திய விடுதலைக் கொடி ஏற்றப்பட்டுப் புதிய இந்தியாவுக்கு வாழ்த்துகள் வழங்கப்பட்டன.
உலகின் விடுதலை அரசுகளிடையே இந்தியாவும் பாகிஸ்தானும் தமக்குரிய தனி இடம் பெற்றுள்ளன.
உலக நாகரிகம் காலத் தெய்வத்தின் கனவில் உலவிய காலத்திலிருந்து இயற்கையன்னையின் மடியிலிருந்துகொண்டு அக்கனவுகளுடன் ஊடாடிய பாரதச் செல்வி, பிரிவினை யென்னும் பேரிடம் ஏற்று, விடுதலைச் செல்வனுடன் தன் வாழ்வை உரிமையுடன் இணைத்துக்கொண்டாள்!