11. வானவில்
புதிய சூழலும், பொறுப்பும்
ய
புயலாக எழுந்த விடுதலைப் போராட்டம், மழையாக வாரியடித்துப் பெய்துவிட்டது. வானம் வெளி விட்டிருக்கிறது. மாநிலத்தின்மீது விடுதலைக் கதிரவன் தன் பொன் கதிர்களைப் பரப்பத் தொடங்கிவிட்டான். வானவெளியில் தூவானமாகப் பரந்துலவும் நீரணுக்கள் அவ்வொளிக்கதிர்களைக் கூறிட்டுப் பல வண்ணப் பட்டையாக்கியுள்ளன. அவற்றின் ஒளி வண்ணம் கட்புலனுக்கு இன்பம் தரும் வானவில்லாகக் காட்சி தருகிறது. பெய்த மழையின் சின்னமாகவும், அம்ழை வளத்தைப் பெருக்க உதவும் ஒளி வண்ணத்தின் விளக்கமாகவும் அவ்வானவில் நம் கண் முன் நடமிடுகிறது.
ஆசியா ஐந்து கண்டங்களுள் ஒரு கண்டமாகவே கொள்ளப் படுகிறது.ஆனால், நில இயல், பண்பாடு, வரலாறு ஆகிய மூன்று வகையிலும் ஐந்து கண்டத்தின் கூறுகளும் அதில் அடங்கி யிருக்கின்றன. உலக நாகரிகம் அதன் புற வளர்ச்சியே என்று கூறத்தகும். ஆசியாவினுள்ளும் இதுபோல எல்லாக் கூறுகளும் பாரத மாநிலத்தில் செறிவுறுகின்றன. இங்ஙனம் உலகத்தின் பல வண்ணக் கூறுகளைச் சிறு அளவில் தன்னகங்கொண்ட இந்தியா, உலகில் ஒரு வானவில்லாய்த் திகழ்வதில் வியப்பில்லை.
உலகின் பண்பாட்டு வளங்கள், சமயங்கள் யாவும் ஆசியா உலகுக்களித்த பரிசுகள், மேலை ஆசியா, வட ஆப்பிரிக்கா, தென்ஐரோப்பா ஆகியவை அடங்கிய நடுநிலக் கடலுலகம் நீண்ட காலமாக இவற்றின் வளர்ப்புப் பண்ணையாய் இருந்து. மேலை ஐரோப்பிய நாகரிகம் இவற்றின் முழுநிறை பயனை அடைந்து, வளம் பெற்றோங்கியுள்ளது. அது ன்று உலக நாகரிகத்தின் புதுப்பண்ணையாகியுள்ளது. தனக்குப் பண்பாட் டியக்கங்கள் தந்த ஆசியப் பழந்தாயகத்திற்கு அது இன்று தன்