பக்கம்:அப்பாத்துரையம் 12.pdf/275

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




254

அப்பாத்துரையம் - 12

கடமையாற்ற முன் வந்துள்ளது. பண்பாட்டியக்கங்கள் ஆசியாவிலிருந்து மேற்கு நோக்கிச் சென்றது போலவே, விடுதலை இயக்கங்களும் அறிவியல் வளர்ச்சிகளும் இப்போது ஐரோப்பாவிலிருந்து புதியனவாய் எழுந்து ஆசியாவுக்கும் உலகுக்கும் கிழக்கு நோக்கிப் பரவத் தொடங்கியுள்ளன.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து புதிய ஜப்பான், கமால்பாஷாவின் புதிய துருக்கி, புதிய சீனா, புதிய இந்தியா, புதிய தென்கிழக்காசியா ஆகியவற்றின் மறுமலர்ச்சிகள் ஏற்பட்டுள்ளன. மேலை நாகரிகத் தாக்குதலால் புத்துயிர் பெற்றுள்ள இந்நாடுகள், மீண்டும் உலக நாகரிகத்தின் வளர்ச்சியில் ஒரு புத்தலையெழுப்பிப் புத்தூழி உண்டு பண்ண உதவும் என்று நாம் நம்பலாம். இந்தியா அப்புத்தலையின் பொன்முகடாய் இயங்கும் என்பதில் ஐயமில்லை.

அரசியலமைப்பும் சட்டமும்

உலகவாழ்வில் தனக்கிருக்கும் பெரும் பொறுப்பை இந்தியா உணர்ந்துள்ளது. இந்தியாவின் வருங்கால வளர்ச்சியில் தனக்கிருக்கும் பெரும் பொறுப்பைப் பேரவையும் உணர்ந்து கொண்டுள்ளது. இந்தியாவின் அரசியலமைப்புக்காகக் கூட்டப்பட்ட அரசியலமைப்பு மன்றத்தின் ஆக்கமும் திட்டமுமே இதற்குச் சான்று பகரும். மன்றத்தின் தேர்தலுக்கு விடுதலைப் பெருநிலையமாகிய பேரவை ஆட்களை நிறுத்தியபோது, அது எல்லாச் சமூகத்தினரையும் வகுப்பினரையும் தன் பேராட்களாக நிறுத்திப் பெருமை கொண்டது. விடுதலைப் போராட்டம் பேரளவில் தனதாயினும், விடுதலை வெற்றியில் எல்லாக் கட்சியினருக்கும் உரிமை உண்டு என்பதை அது உணர முன் வந்தது. அதனால் திறமுடைய எல்லாக் கட்சியினரும் அதன் சார்பிலேயே நிறுத்தப்பட்டு வெற்றிகரமாகத் தேர்ந்தெடுக்கப்

பட்டார்.

அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்குவதற்காக அமர்த்தப்பட்ட அறிஞர் குழுவுக்கு டாக்டர் அம்பேத்காரே தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். உரு சங்கிலியின் வலு அதன் வலிமை குறைந்த கண்ணியின் வலுவே என்பதைப் பேரவை மறந்துவிடவில்லை. இந்திய வாழ்வின் பெருங்கறையும் பெருத்த