இந்திய மக்கள் விடுதலை இயக்க வரலாறு
(255
வலுக்குறைவும் தாழ்த்தப்பட்டவர் பிற்போக்கிலேயே அடங்கி யுள்ளன. அவ்வகுப்பின் தலைவரும் ஒப்பற்ற அறிஞரேறுமான டாக்டர் அம்பேத்காரே அதன் தேசிய நோக்கத்தை வலியுறுத்தத் தக்கவர் என்று பேரவை கருதியிருப்பதில் வியப்பில்லை. அரசியலமைப்புச் சட்டத்தை மேற்போக்காகப் பார்ப்பவருக்குக் கூட இந்நோக்கம் அச்சட்டத்தின் குறிக்கோளாய் விளங்குகிறது என்பது புலனாகாமலிராது. தீண்டாமையும் கொடிய சாதி அநீதிகளும் இந்தியர் வாழ்வில் இன்னும் இடம்பெற்றே வருகின்றனவாயினும், அரசியல் அமைப்புச்சட்டம் அவற்றை ரண்டகமற்ற மொழிகளால் கண்டிக்கிறது என்பதும், அவற்றை அடியோடு எதிர்க்கக் கங்கணம் கட்டியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கன.
ந்திய அரசியலமைப்பு மன்றம் 1946ல் பிரிட்டிஷ் ஆட்சியின்போது கூட்டப்பட்டது. விடுதலை நாளுடன் அதுவே நாட்டின் அரசியல் மன்றமாகி விட்டது. 1949 இறுதிக்குள் இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாகிவிட்டது. அவ்வாண்டு நவம்பர் 26-ஆந் தேதி அது சட்டமாய் நிறைவேறிற்று. அதன்படி நடைமுறையில் 1950 ஜனவரி, 26-ஆந் தேதி இந்தியா ஒரு குடியரசாயிற்று. மவுண்ட்பாட்டன் பெருமகனார் விடுதலை இந்தியாவின் தொடக்க ஆட்சி முதல்வர் ஆகவும், இந்தியரான முதல் ஆட்சி முதல்வர் ஸி.ஆர். ராஜகோபாலாசாரியார் ஆகவும் இருந்து பணியாற்றினர். குடியரசு நிறுவப்பட்டதும் குடியரசின்படி முதல் இந்தியத் தலைவராக பாபு ராஜேந்திர பிரசாது அமர்த்தப்பட்டார்.
அமைப்பின் குறிக்கோள்
இந்திய அரசியலமைப்புச் சட்டம் உலகத்தின் எல்லா நாகரிக நாடுகளின் அரசியலமைப்பு முறைகளையும் உலக நாடுகளின் அவைத் திட்டங்களையும் நன்கு ஆராய்ந்தவர்களால் உருவாக்கப்பட்டது. அது 22 பிரிவுகளும், 395 விதிகளும், 8 பட்டியல்களும் அடங்கியது. இந்தியாவை அது இருபத்தெட்டு அல்லது இருபத்தொன்பது தனியரசுகள் அடங்கிய ஒரு பெரிய கூட்டரசாகவும், குடியரசாகவும், சமயச்சார்பற்ற அரசாகவும் குறிக்கொண்டுள்ளது. அதன் குடியுரிமை, மாநில முழுமைக்கும்