256
அப்பாத்துரையம் - 12
ஒரே படித்தரமுடைய பொதுக்குடியுரிமை, தில் ஜாதிஅமத நிறவேறுபாடோ, இன வேறுபாடோ, பால் வேறுபாடோ இல்லை.
தவிர, சமூகங்கடந்த அடிப்படை மனித உரிமைகளுக்கு அதில் மிக முக்கியமான இடம் தரப்பட்டிருக்கிறது.பேச்சுரிமை, எழுத்துரிமை, ஒருங்கேகூடிக் கழகம் அமைக்கும் உரிமை, ஆயுதமின்றி அமைதியுடன் கூட்டம் கூடும் உரிமை. இந்தியா முழுவதும் தங்கு தடையின்றிச் செல்லும் உரிமை, அதன் எந்தப் பகுதியிலும் தங்கி வாழும் உரிமை, எந்தத் தொழிலும் செய்யும் உரிமை ஆகியவை அவ்வடிப்படை உரிமையின் கூறுகளாக வகுக்கப்பட்டு, அவற்றின் பாதுகாப்புக்கு உறுதி தரப்படுகின்றது. பொது அமைதி, பொது மதிப்பு, அரசியற்பாதுகாப்பு ஆகிய தனிக்காரணங்களுக்காக மட்டுமன்றி, வேறெவ்வகையிலும் இவை மறுக்கப்படுதலோ, கட்டுப்படுத்தப்படுதலோ, குறுக்கப்படுதலோ இல்லை. இவற்றுக்கு மாறுபாடான அல்லது இவற்றின் உரிமைகளைக் குறைக்கிற எந்தச் சட்டமும் செல்லுபடியாகாது.
ய
தீண்டாமை, சட்டப்படி தண்டிக்கக்கூடிய ஒரு குற்றமாக்கப் பட்டுள்ளது. சிறுபான்மையாளர் உரிமைகளுக்கும், சமயம், மொழி, கலை, பண்பாடுகளுக்கும் பாதுகாப்புறுதி அளிக்கப்பட்டுள்ளது. சுதந்தரம், சமத்துவம் ஆகியவை எவராலும் துணிந்து கேட்டுப் பெறத்தக்க உரிமைகளாக்கப் பட்டுள்ளன. இவ்வுரிமைகளைக் காக்கும் பொறுப்பு, கூட்டுறவு நீதிமன்றத்துக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. தனி மனிதர் சொத்துரிமைகள் மட்டுமன்றி, சமய நிலையங்களின் பேரால் சொத்து வாங்குவதற்கும் பேணுவதற்கும் உரிய உரிமைகளும் முழுதும் மதிக்கப் பட்டிருக்கின்றன.
மாநிலத்தின் பெயர் இந்தியக் கூட்டுறவு அல்லது இந்தியா என்று குறிக்கப்பட்டாலும், அதன் பழம்பெயராகிய பாரதம் புதிய தேசியப் பெயராக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மாநிலம் பெற்ற விடுதலையை மாநில முழுவதும் கொண்டு பரப்ப அரசியலமைப்பாளர் எடுத்துக் கொண்ட முயற்சிகள் இவை. ஆனால், அமைப்பின் குறிக்கோள் மாநில எல்லை தாண்டி மக்கள் எல்லையிலும் தன் வருங்காலத் திட்டங்களைச் சுட்டியுள்ளது. எல்லா மக்களுக்கும் போதிய உணவு, உடை