இந்திய மக்கள் விடுதலை இயக்க வரலாறு
(257
உறையுள் வசதிகளை ஏற்படுத்துதல், சரிசம வேலைக்குச் சரிசம அளவில் ஊதியம் வகுத்தல், எல்லாருக்கும் தொழில் கொடுத்தல், எல்லாருக்கும் இலவசக் கட்டாயக் கல்வி தருதல் ஆகிய இவை வருங்காலப் பாரதத்தில் சட்டங்களியற்றுபவர்களுக்குரிய கடமைப்பாடுகள் என்று அரசியலமைப்பு வழிகாட்டி உள்ளது. குடியரசை இவ்வார்வம் சமதரும எல்லைக்கு இட்டுக்கொண்டு செல்லுகிறது என்பதை நாம் காணலாம்.
குடியரசின் நடைமுறை ஆட்சியைக் கூட்டுறவின் நடுவரசு தலைமை வகித்துத் தனியரசுகளை நடத்துகின்றது. கூட்டுறவின் ஒற்றுமையையும் வலுவையும் நாடி மிகுதி உரிமைகளும், தனியரசுகளுக்கு வகுக்கப்பட்டன போக மீந்த உரிமைகளும்' நடுவரசுக்கே விடப்பட்டுள்ளன. அதே சமயம் தேர்தல் முறைகள் மூலம் நடுவரசில் தனியரசிலுள்ள பொது மக்களின் நேரடிப் பிரதிநிதித்துவமும் பல வகைகளில் காக்கப்பட்டிருக்கிறது.
நடுவரசு
நடுவரசுக்குரிய ஆட்சித்துறைகளுள் பாதுகாப்பு, வெளி நாட்டுத் தொடர்பு, அஞ்சல் தந்தித் துறைகள், தொடர் ஊர்திகள்2, வருமானவரி, தீர்வை வரி', காப்புவரி ஆகியவை முக்கியமானவை. இவை தவிர, தலை நிலங்கடந்த ஆட்சியுரிமை', நில உரிமை எல்லை கடந்த கடலக உரிமை2, குடி நுழைவு உரிமை, துறைமுகப் பாதுகாப்பு, வானொலி, ஒலிபரப்பு முறைகள், வானெறிகள், தேசியத் தலைமைப் பாதைகள், மக்கட் கணிப்பு, மாநில அளவை ஆராய்ச்சி, தேசிய சேமப்பொருளகம்', செலாவணி முறைகள், அறிவியல் இலக்கியப் புத்துரிமைப் பாதுகாப்புக்கள், சுரங்கங்கள், எண்ணெய்க் கிணறுகள், உப்பு ஆகியவையும் நடுவாட்சியின் நேரடியுரிமையுட்பட்டவை. இவை தவிர, பல துறைகளில் நடுவரசு, தனியரசுகளுடன் சேர்ந்து ஒத்துழைக்கிறது. தனியரசுகளுக்கென்று ஒதுக்கப்பட்ட துறைகள் வேறு சில.
மாநில அரசியல் பேரவைக்கு இரண்டு மன்றங்கள் உண்டு. மேல் மன்றம், 'அரசுகள் மன்றம்' என்றும்; மற்றது, 'மக்கள் மன்றம் என்றும் வழங்கப்படும். இம்மன்றங்கள் 5 ஆண்டுக் காரு முறை தேர்ந்தெடுக்கப்படும். நெருக்கடிக்காலங்களில்,
>